Posts

Showing posts with the label NANJIL

NANJIL NAATTU MARUMAKKAL VALI MAANMIYAM

Image
  NANJIL NAATTU  MARUMAKKAL VALI MAANMIYAM 1916  ல் திருவனந்தபுரத்தில் இருந்து வந்த தமிழன் பத்திரிகையில் அதன் ஆசிரியர் பண்டித எஸ்.முத்துசாமிப் பிள்ளை ஒரு சம்பவத்தை எழுதியிருந்தார்.    ஏதாவது ஒரு விஷயமாக சாலைக்கடைப் பக்கமாக அவர் போகாத நாள் இல்லை. ஒருநாள் போகும்போது ஒரு பண்டாரம் சிவகணம் போல நின்று  ‘ முத்திநெறி அறியாத மூர்க்கரோடு முயல்வேனை ‘  என்ற பாடலை  ‘ கல்லும் கரையும் வண்ணம் ‘  பாடிக்கொண்டிருந்தார். இவர் நின்று அதை கவனித்தார். பண்டாரத்துக்கு ஓரளவு சில்லறை சேர்ந்தது   தானும் சில்லறை போட்டு நகரும்போது பண்டாரம் பின்னால் வந்தார். தன்னிடம் புதையல் பற்றிய தகவல் அடங்கிய ஒரு சுவடிக்கட்டு இருப்பதாகவும் வீட்டுக்கு சென்று வாசித்துப் பார்க்கும்படியும் சொன்னார். போய் வாசித்துப் பார்த்தால் அது ஒரு கவிதை நூல். ஏமாற்றம் ஏற்படாலும் எஸ்.முத்துசாமிப் பிள்ளை அதை வாசித்தார். அது வேறு வகையான புதையல் என்று தெரிந்தது.   அதுதான்  ‘ நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம் ‘.  இது கிட்டத்தட்ட மூன்று வருடம் தொடராக வந்தது. அக்காலத்தில் நாஞ்சில்நாட்டில...

NANJIL NAADAN ,WRITER BORN 1947 DECEMBER 31

Image
NANJIL NAADAN ,WRITER  BORN 1947 DECEMBER 31 நாஞ்சில் நாடன் (பிறப்பு: திசம்பர் 31, 1947, வீர நாராயண மங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) ) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் க.சுப்பிரமணியம். துணைவியார் பெயர் சந்தியா சுப்பிரமணியம். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார். நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல். இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்துநடை. தலைகீழ் விகிதங்கள் நாவலை இயக்குநர் தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார் பெருமைகளும் விருதுகளும் 2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்...