ROSAAPPOO RAVIKKAIKARI 1979
ROSAAPPOO RAVIKKAIKARI 1979 ரோசாப்பூ ரவிக்கைகாரி 1979 ரவிக்கையோ பாவாடையோ அணிந்திராத பெண்கள் நிறைந்த வண்டிச்சோலை கிராமத்தில், ரவிக்கையும் பாவாடையும் அணிந்த மன்னார்பாளையத்து நந்தினியின் பாதம் பட்ட பிறகு நிகழ்ந்த மாற்றங்களுக்கெல்லாம் அவளும் ஒரு காரணம். அதற்காக அவள் பட்ட பாடுகளும் கொஞ்சம் நஞ்சமல்ல எட்டாம் வகுப்புவரை படித்திருந்த நந்தினி வண்டிச்சோலை கிராமத்துக்கு வந்தபோது, நாட்டில் உப்பு சத்தியாகிரகம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. விடுதலைக்கு முந்தைய காலத்தில் நடந்தது நந்தினியின் கதை. நந்தினியின் முடிவே இன்றும் பெண்கள் பலருக்கும் ஏற்படுகிறது என்பதுதான் சோகம். நந்தினி நவீனத்தின் அம்சம் என்பதைப் பழமைவாதிகள் உணரும்வரை இத்தகைய சோக முடிவுகளே தொடரும் என்பது கவலை தரும் உண்மை. அந்தக் கிராமத்துக்கு அவள் உள்ளாடையையும் கிராமபோனையும் பெட்ரோமாக்ஸ் விளக்கையும் கொண்டுவந்தாள். அவை எல்லாவற்றையும்விட அவள் கொண்டுவந்த புதிய நாகரிக மனம்தான் அந்தக் கிராமத்தினரை அதிர்ச்சியடையச் செய்தது. அவள் நகரத்தில் வாழ்ந்தவள். காலையில் பல் துலக்க அடுப்புக்கரியையோ ஆலங்குச்சியையோ வேலங்குச்சியையோ தேடாதவள். காலையில் எழுந்தவுடன் ...