Showing posts with label CULTURE. Show all posts
Showing posts with label CULTURE. Show all posts

Monday, 16 December 2019

WHY FOREIGNERS PREFER INDIA AND ITS CULTURE


WHY FOREIGNERS PREFER
 INDIA AND ITS CULTURE




ஹிந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதை சுற்றியே வருகிறோம் ???

கோயில் பிராமணர்களுக்கு மட்டும் தட்டு காசு கிடைக்க வழி செய்யும் வியாபார ஸ்தலமா ???

பாரத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விசாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை காட்டினார்கள் ???

கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ????

மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ????
🤔🤔🤔🤔🤔

உலகின் குருவாக பாரதம் ஆனது எப்படி ???

எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் பட்ஜட் போடுவார்கள்.

இதையேதான் ஹிந்து கோயில்கள் செய்தன.

கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.

மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.

கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம்,  பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.

கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால்  கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.

நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.

சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு  தொடர்ந்து வேலை.


நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.

மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என, 
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள். 

தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.

அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.

கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.

இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.

இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.

பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.

12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.

இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் ஹிந்து கோயில்கள்.

ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம், 

அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என, 

ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை. 

இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.

மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிரைவு வாழ்க்கை. 

இதை உடைக்கத்தான், கோயில்கள் தகர்க்கப்பட்டன. இதை தகர்க்கத்தான் கோயிலின் மேல் மாற்று மத படையெடுப்பு நடந்தது.

கோயில்கள் இல்லாமல் போனால் வாழ்வாதாரம் கெடும் என அந்நிய சக்திகள் அறிந்திருந்தனர்.

தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,

எப்படி, உயிருள்ள ஒருவரின் சொத்தை அவர் சம்மதம் இல்லாமல் மற்றவர் அபகரித்து கொண்டாலும், அது அபகரித்தவரின் சொத்து ஆகாதோ, அதே போல, அனைத்து கோயிலின் சொத்துக்களும், அந்த கோயிலில் வாழும் அந்த தெய்வத்திற்கே சொந்தம் என்று காலம் காலமாக நமது சனாதன தர்மத்தில் இருக்கும் நம்பிக்கையும் வகுக்கப்பட்ட கொள்கையும்.

உயிருள்ள ஒருவர்,எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி  அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக,  பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம். 

அனைத்து சமூகமும் ஒரே முகமாக ஹிந்து என்ற ஒரு குடையின் கீழ், தன்னிறைவு பெற்ற வாழ்க்கையை நமக்கு அளித்ததே ஹிந்து தர்மமும், ஹிந்து  கோயில்கள் மட்டும்தான்.

இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, பாரதம் உலக குருவாக திகழ்ந்தது

கோயில்கள், மற்றும் ஹிந்து தர்மத்தை பற்றி, எனது சிறிய பார்வை.
🙏🙏🙏🙏

Wednesday, 13 June 2018

CHAPPAL BEAT TO MUSLIM CULTURE OF IRAN TO ABIDE RULES OF MUSLIMS BY TAMIL GIRL SOWMIYA SWAMINATHAN




CHAPPAL BEAT TO MUSLIM CULTURE OF IRAN 
TO ABIDE RULES OF MUSLIMS BY  TAMIL GIRL SOWMIYA SWAMINATHAN 



இரானில் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் (தலைமுடியை மறைக்கும் துணி) அணிய வேண்டும் என்ற விதி தனது தனிப்பட்ட உரிமைகளுக்கு எதிராக உள்ளதால், அங்கு நடக்கவுள்ள ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என செஸ் வீராங்கனை சௌமியா சுவாமிநாதன் அறிவித்துள்ளார்.

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடர், ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4 வரை இரானில் நடக்க உள்ளது. இதில் கலந்துகொள்ள இந்தியாவை சேர்ந்த சௌமியா சுவாமிநாதன் தேர்வாகியிருந்தார்.

உலக ஜூனியர் பெண்கள் பட்டம், பெண்கள் கிராண்ட் மாஸ்டர் பட்டம் உள்பட பல பட்டங்களைப் பெற்ற செளமியா, உலக பெண் செஸ் போட்டியாளர்கள் தர வரிசையில் 97 வது இடத்திலும், இந்திய அளவில் 5வது இடத்திலும் உள்ளார்.

1979-ம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சிக்கு பின்னர், இரானில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இரானுக்கு செல்லும் வெளிநாட்டுப் பெண்களும் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும்.

இந்நிலையில், கட்டாயத்தின் பெயரின் ஹிஜாப் அணிந்துகொண்டு போட்டியில் கலந்துகொள்ள தமக்கு விருப்பம் இல்லாததால் இரானில் நடக்கும் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ளபோவதில்லை என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சௌமியா கூறியுள்ளார்.


'இரானில் உள்ள சட்டதிட்ட நிபந்தனை எனது அடிப்படை உரிமை, பேச்சு சுதந்திரம், மதச் சுதந்திரத்திற்கு எதிராக இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில், எனது உரிமைகளை காப்பாற்றுவதற்கான ஒரே வழி இரான் செல்லாமல் இருப்பபதுதான்'' என சௌமியா குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளின் போது எங்களது தேசிய அணியின் உடையையும், விளையாட்டு உடையையும் அணிய வேண்டும் என போட்டியின் ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்ப்பதை நான் புரிந்து கொள்றேன் என கூறியுள்ள சௌமியா, விளையாட்டுகளில் மதக் குறியீடு கொண்ட உடைகளை அணிய நிர்ப்பந்திப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு முறையும் மிகுந்த பெருமை கொள்வதாக கூறியுள்ள செளமியா, தற்போது நடக்கும் முக்கியமான போட்டியில் கலந்துகொள்ள முடியாததால் வருத்தமடைகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் ''விளையாட்டு வீராங்கனையாக, விளையாட்டுக்காக பல விஷயங்களை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறேன். ஏனெனில், விளையாட்டுதான் எங்களது வாழ்க்கையின் முன்னுரிமை. ஆனால், சில விஷயங்களில் நிச்சயம் சமரசம் செய்துகொள்ள முடியாது'' என தெரிவித்திருக்கிறார்.

செளமியா மட்டுமல்ல, முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த 22 வயது செஸ் வீராங்கனையான நாஸி பாயிசிஸ்-பார்னேஸும் ஹிஜாப் விவகாரத்தால் 2017-ல் இரானில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ளாமல் தவிர்த்தார்.

'பெண்களுக்கு அடிப்படை உரிமை இல்லாத ஒரு இடத்தில், பெண்களுக்கான உலக செஸ் போட்டியை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது'' என நாஸி அப்போது கூறியிருந்தார்.

2017 உலக செஸ் போட்டிக்கான இடத்தை மாற்ற வேண்டும் அல்லது பெண்கள் தங்களது தலையை மூடுவதை அவரவர் விருப்பத்திற்குரியதாக மாற்ற வேண்டும் என கேட்டு போட்டி ஏற்பாட்டாளர்களிடம் மனுவும் கொடுத்தார்.

இந்நிலையில், தற்போது இந்தியாவைச் சேர்ந்த செளமியாவின் கருத்துக்களும் பலத்த விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், செளமியாவின் கருத்து குறித்து பிரபல செஸ் வீராங்கனையும், இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டருமான ஹம்பி கோனேரு பிபிசி தமிழிடம் பேசினார்.

''இஸ்லாமிய நாடுகளில் ஸ்கார்ஃப், ஹிஜாப் அணிந்து விளையாடுவது என்ற வழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. நான்கூட ஸ்கார்ஃப் அணிந்து போட்டியில் பங்கேற்றிருக்கிறேன்'' என்கிறார்.

ஸ்கார்ஃப் அணிய வேண்டும் என்பது சில இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் விதிகளை ஏற்றுக்கொண்டு விளையாடச் செல்வதும் அல்லது தவிர்ப்பதும் போட்டியாளர்களின் தனிப்பட்ட விருப்பம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்

முன்னாள் பெண் கிரிக்கெட் வீராங்கனையான சாந்தா ரங்கசாமி இதுபோன்ற விதிகளை தான் முற்றிலும் எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.

''விளையாட்டுகள் தொடர்பாக எல்லா நாடுகளிலும் ஒரே விதி இருக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி விதி இருக்கவே கூடாது. ஒரே மாதிரியான விதிகளை ஏற்றுக்கொள்ளாத நாடுகளில் போட்டிகளை நடத்தக்கூடாது'' என்கிறார் சாந்தா.

சர்வதேச போட்டிகளில் உள்ளூர் விதிகளை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என சாந்தா கேள்வி எழுப்புகிறார்

''தற்போது இரானில் நடக்கவிருக்கும் போட்டியில் கலந்துக்கொள்ளாததன் மூலம், சௌமியா தனக்கு கிடைத்த வாய்ப்பை தவற விட்டிருக்கலாம். ஆனால், தனது உரிமைக்காக எதிர்ப்பு குரல் கொடுத்த செளமியாவை நினைத்துப் பெருமைப்படவேண்டும்'' என்று அவர் மேலும் கூறினார்.