’பரேல்வி’ எனும் முற்போக்கு சிந்தனையில் வளர்ந்து பயங்கரவாதியான ஆதில்
’பரேல்வி’ எனும் முற்போக்கு சிந்தனையில் வளர்ந்து பயங்கரவாதியான ஆதில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகக் காரணமான ஆதில் அகமது தார்(19), இஸ்லாத்தில் முற்போக்கு சிந்தனையாகக் கருதப்பட்ட ’பரேல்வி’ பிரிவு குடும்பத்தை சேர்ந்தவர். இவரது செயல்பாடுகளின் மூலம், எப்படிப்பட்டவர்களையும் தமக்கு சாதகமாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் மாற்றி விடுகிறார்கள் என்பது உறுதியாகிறது. மத்திய காஷ்மீரின் புல்வானா மாவட்டத்தி குந்திபாக் கிராமத்தை சேர்ந்தவர் ஆதில். இங்கிருந்து 10 கி.மீ தொலையில் தான் தாக்குதல் நடந்த புல்வானா உள்ளது. இந்த கிராமத்தினரில் பெரும்பாலானவர்கள் பரேல்வி கொள்கைகளை பின்பற்றுபவர்கள். தவறவிடாதீர் புல்வாமா தாக்குதல் எதிரொலி : ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திடீர் வாபஸ் பயங்கரவாதியான ஆதில் அகமது தாரின் குடும்பமும் பரேல்வி கொள்கைகளை நேசித்து வருகிறது. பரேல்விகள் இடையே ஜிஹாத் பற்றிய பேச்சுக்களும் அதிகமாக இருப்பதில்லை எனப் பொதுவானக் கருத்து உள்ளது. இப்படிப்பட்ட குடும்பத்தின் இளைஞர்களையும் ஜெய்ஷ்-எ-முகம்மது போன்ற தீவிரவாத அமைப்பினர் அ...