தமிழகத்தின் மர்லின் மன்றோ டி .ஆர் .ராஜகுமாரி ஒரு சரித்திரம் இறப்பு 1999 செப்டம்பர் 20
தமிழகத்தின் மர்லின் மன்றோ டி .ஆர் .ராஜகுமாரி ஒரு சரித்திரம் MAY 5,1922-இறப்பு 1999 செப்டம்பர் 20 டி.ஆர் ராஜகுமாரி (மே 5, 1922 - செப்டம்பர் 20, 1999) தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர். நடிப்பு, நடனம், பாடல் அனைத்திலும் பெயர்பெற்றவர். வாழ்க்கைக் குறிப்பு[தொகு] 5.5.1922 வெள்ளிக் கிழமையன்று தஞ்சாவூரில் ராதாகிருஷ்ணப் பிள்ளை-ரங்கநாயகி தம்பதிக்கு பிறந்தவர் டி.ஆர்.ராஜகுமாரி. இவரது இயற்பெயர் "ராஜாயி' என்பதாகும். பள்ளியில் 3ஆம் பாரம் (8ஆம் வகுப்பு) வரை இவர் படித்துள்ளார். . பிறந்த சில நாட்களில் தகப்பனாரைப் பறிகொடுத்தவர். இவர் திருமணமே செய்து கொள்ளாமல் தன் சகோதரர் டி. ஆர். ராமண்ணா குடும்பத்துக்கு ஆதரவாக வாழ்ந்தார். டி.ஆர்.ராஜகுமாரியின் முன்னோர்கள் டி.ஆர்.ராஜகுமாரியின் குடும்பமே ஒரு கலைக் குடும்பமாகும். டி.ஆர்.ராஜகுமாரியின் தாய்வழிப் பாட்டி குசலாம்பாள் கர்நாடக பாடகியாக விளங்கியவர். டி.ஆர்.ராஜகுமாரியின் சித்தி எஸ்.பி.எல். தனலக்ஷ்மி பிரபல கதாநாயகி நடிகையாவார். எஸ்.பி.எல்.தனலக்ஷ்மியின் மகள்க...