Posts

Showing posts with the label NOT SET

PEOPLES CAME TO SEE MY ACTING ,NOT SET -M.R.RADHA

Image
PEOPLES CAME TO SEE MY ACTING ,NOT SET -M.R.RADHA 'மக்கள் என் நடிப்பை பாக்க தான் வர்றாங்களே தவிர, செட்டிங்கை இல்ல...' என்பார் ராதா. அக்காலத்தில், 'மைக்' கிடையாது; கடைசி வரிசையில் உட்கார்ந்திருக்கும் ரசிகனுக்கும் கேட்கும் வகையில், தொண்டை கிழிய கத்தி பேச வேண்டும். அதனால், ஒவ்வொரு நாள் இரவும் நாடகம் முடிந்த பின், ஒப்பனை அறையில் இவருக்காக ஒரு பெரிய குண்டானில் பழைய சோறும், சின்ன வெங்காயமும் இருக்கும். அதை மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார் ராதா. நள்ளிரவில் பழைய சோறும், சின்ன வெங்காயமும் சாப்பிட்டால், பலருக்கு ஜன்னி வந்து விடும். ஆனால், மேடையில் தன் சக்தியை எல்லாம் பிரயோகித்து நடிக்கும் ராதாவுக்கு, அந்த உணவு தேவையாக இருந்தது. அவரது குழுவிலிருந்த சிறுவர்களுக்கு, ராதாவுக்காக வெங்காயம் உரிப்பது தான் முக்கிய வேலை. தன் குழுவில் இருந்த ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் அக்கறை காட்டினார் ராதா. குழுவில், 50 லிருந்து 60 பேர் வரை இருந்தனர். அதில், பெண்கள், 10 முதல் 15 பேர். 'நாடக நடிகர்கள் யாரும் தூங்கக் கூடாது; தூங்கும் போது கூட காலாட்டிக்கிட்டே தான் தூங்கண...