KOTHAMANGALAM SUBBU ,WRITER BORN 1910 NOVEMBER 10 - 1974 FEBRUARY 15
KOTHAMANGALAM SUBBU ,WRITER BORN 1910 NOVEMBER 10 - 1974 FEBRUARY 15 பிரபல இயக்குனர் ,கதாசிரியர் கொத்தமங்கலம் சுப்பு 1974 பெப்ரவரி 15 இல் இறந்தார் கொத்தமங்கலம் சுப்பு (Kothamangalam Subbu, 10 நவம்பர் 1910 - 15 பெப்ரவரி 1974) என்பவர் கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர், திரைப்பட இயக்குநர், கதை வசனகர்த்தா, வில்லுப்பாட்டிசைக் கலைஞர் என்று மட்டுமல்லாது பத்திரிக்கையாளர், துணைஆசிரியர், நாடகநடிகர் என்று பன்முகங்கள் கொண்ட அறிஞராக அறியப்பட்டார். மிகப் பிரபலமான தில்லானா மோகனாம்பாள் தொடர்கதையை ஆனந்த விகடனில் கலைமணி என்ற புனைபெயரில் எழுதியவர். பத்மசிறீ விருது பெற்றவர். ஆரம்ப காலம்[தொகு] கொத்தமங்கலம் சுப்புவின் இயற்பெயர் சுப்பிரமணியன். இவர் தமிழ்நாடு, காரைக்குடிக்கு அருகில் கன்னாரியேந்தல் என்ற ஊரில் மகாலிங்கம் ஐயருக்கும், கனகம்மாளுக்கும் பிறந்தார். சிறு வயதிலேயே தாயை இழந்த சுப்பு, சிற்றன்னையின் பராமரிப்பில் வளர்ந்தார். 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றார். சொந்தத்திலேயே பிற்காலத்தில் பிரபலமான நடிகை சுந்தரிபாயைத் திருமணம் செய்துகொண்ட சுப்பு கொத்தமங்கலம் எ...