AROOR DASS , MY FAVOURITE DIALOGUE WRITER
AROOR DASS , MY FAVOURITE DIALOGUE WRITER நெஞ்சில் பூத்த பாசமலர் கற்பனையான சினிமா கதைகளை விட, திரை உலகப் பிரபலங்களின் வாழ்க்கை சுவாரசியம் நிறைந்தவை. அவற்றை அறிந்தவர்கள் ஒரு சிலரே. அவர்களில் முக்கியமானவர் ஆரூர்தாஸ்.தன் திரை உலகப் பயணத்தை எழுதும் அவர், சினிமாவின் மறுபக்கத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறார்.ஆரூர்தாஸ் வசனம் எழுதிய முக்கிய படங்களாவன:– சிவாஜிகணேசன் நடித்தவை: பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, பார்த்தால் பசி தீரும், புதிய பறவை, இருமலர்கள், தெய்வ மகன், பைலட் பிரேம்நாத், நான் வாழவைப்பேன்,விஸ்வரூபம், தியாகி,விடுதலை, குடும் பம் ஒரு கோவில்,பந்தம்,அன்புள்ள அப்பா. எம்.ஜி.ஆர். நடித்தவை: தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக்காத்த தனயன், அன்பே வா, குடும்பத்தலைவன், நீதிக்குப்பின்பாசம், வேட்டைக்காரன், தொழிலாளி, தனிப்பிறவி, தாய்க்குத் தலைமகன், ஆசைமுகம், பெற்றால்தான் பிள்ளையா? ஜெமினிகணேசன் நடித்தவை: வாழவைத்த தெய்வம், சவுபாக்கியவதி, பாசமலர், பார்த் தால் பசி தீரும், திருமகள், பெண் என்றால் பெண். இதர படங்கள்: வெள்ளிக்கிழமை விரதம், பத்ரகாளி, இதய கமலம், மகுடம் காத்த மங்கை. ‘டப...