T.R.MAHALINGAM , HIGH PITCH VOICE SINGER , LEGEND BORN 1924 JUNE 16 - 1978 APRIL 21
T.R.MAHALINGAM , HIGH PITCH VOICE SINGER , LEGEND BORN 1924 JUNE 16 - 1978 APRIL 21 நான் என்றுமே தொலைக்காட்சியின் யதார்த்த இசை நிகழ்ச்சிகளுக்கு (reality music shows) எதிரானவன். அதற்கான காரணங்களை முன்னரே எழுதியிருக்கிறேன். ஆனால் பல மொழிகளில் இந் நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளர்கள் என்னை அவற்றின் நடுவராக இருக்கச்சொல்லிக் கூப்பிட்டிருக்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை! அதற்குக் கொடுக்கப்படும் பணமும் உடனடியாகக் கிடைக்கும் புகழும் மிகவும் சபலமூட்டுபவைதான். ஆனால் நான் எப்போதும் திடமாகவே முடியாதென்று சொல்லிவிடுவேன். இந்தவகையான இசைப்போட்டி நிகழ்ச்சிகள் இசையுணர்வுக்குத் தீங்கானவை என்ற எண்ணம் எனக்கு உறுதியாக இருக்கிறது என்றாலும் சில தருணங்களில் இந்நிகழ்ச்சிகளில் என்னை ஆச்சரியப்படுத்திய சில விஷயங்களும் நிகழ்ந்திருக்கின்றன. முதல் ஆச்சரியம், ஒருமுறை இப்போட்டி ஒன்றில் வென்ற ஒரு 17 வயதுப் பாடகர் அவர் ஏ.எம். ராஜாவின் இசைக்கு அடிமை என்று சொன்னது. அதைப்பற்றி ஏ.எம்.ராஜா பற்றிய கட்டுரையில் நான் எழுதியிருக்கிறேன். இரண்டாவது ஆச்சரியம், சிறுவர் வரிசைப் போட்டியில் வெற்றிபெற்ற 13 வயதான கிருஷ்ணமூர்த...