DEVOTIONAL SONGS OF T.M.SOUNDARAJAN
DEVOTIONAL SONGS OF T.M.SOUNDARAJAN *பக்திப்பரவசம்* இன்றைய காலைப்பொழுதில் இடம் பெறும் பாடல்கள்... *டி.எம்.எஸ்ஸின் கணீர் குரலில் திரைக்கு வராமலே பிரபலமான முருகன் பாடல்கள்.!* அந்நாட்களில் எல்லாம் ஒரு சிலர் வீடுகளில் தான் வானொலிப் பெட்டி இருக்கும். இல்லா விட்டால், ஊர்த்திருவிழா, கல்யாண வீடுகள், டூரிங் டாக்கீஸ்கள் என எங்கோ தொலை தூரத்தில் குழாய் ஒலிபெருக்கியில் ஒலிக்கும் பாடல்கள் இவைதான் அன்றைய மனிதர்களின் மன இறுக்கத்தை போக்க வந்த மகிழ்வான நிகழ்வுகள். இப்படிப்பட்ட ஒரு கால கட்டத்தில்தான் வராது வந்த மாமணி போல் வந்து சேர்ந்தார் *டி.எம்.எஸ்* என்கிற டி.எம்.சௌந்தரராஜன். *சிம்ம குரலெடுத்து அவர் பாடிய பாடல்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி எனத் திரையுலகின் இரு ஆளுமைகளுக்கும் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் புகழ்க்கொடி வீசிப்பறந்தன.!* இவர் பாடிய சினிமாப் பாடல்கள் பல விதங்களில் ஹிட் அடித்தவை. ஆனால், திரைக்கு வராமலே இவர் பாடி தமிழர்களின் வாழ்வில் கலந்த *'முருகன் பக்திப்பாடல்கள்'* சாகா வரம் பெற்றவை. *முருகனின் ஆறுபடை வீடுகளிலும் இன்றும் இரவு பகல் பாராது எந்நேரமும் ஒலிப்பவை.!* இத்தனைச் சிறப்புமிக்க *தனிப்ப...