OLYMPIC MEDAL SOLD IN POLAND FOR WELFARE OF CHILD IN OPERATION
OLYMPIC MEDAL SOLD IN POLAND FOR WELFARE OF CHILD IN OPERATION குழந்தை ஒன்றின் சத்திர சிகிச்சைக்காக ஒலிம்பிக் இல் கிடைத்த வெள்ளி பதக்கத்தை ஏலம் விட்ட போலந்து நாட்டு விராங்கனை டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில், பெண்களுக்கான போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மரியா தான் இன்று விளையாட்டு உலகின் சென்சேஷன். தன்னுடைய செயலால் வானளவு உயர்ந்து நிற்கிறார். போலந்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பிறந்து எட்டு மாதமே ஆன மிலோசெக் மலிசா என்ற ஆண் குழந்தைக்கு உடனடியாக இருதய சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதற்கு தேவையான தொகை எவ்வளவு தெரியுமா? 3,85,088 டாலர். அதாவது, இந்திய ரூபாய்க்கு கிட்டத்தட்ட 3 கோடி. இந்த தகவலை பேஸ்புக் மூலம் அறிந்த மரியா, அந்த குழந்தைக்கு எப்படியாவது உதவி புரிய வேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்கு, ஒலிம்பிக் போட்டியில் தான் வென்ற வெள்ளிப் பதக்கத்தை ஏலம் விட முடிவு செய்தார். எனினும், 3 கோடி ரூபாயில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை குழந்தையின் பெற்றோர்கள் ஆன்லைன் மூலம் திரட்டி விட்டனர். மீதமுள்ள தொகையை தன் பதக்கத்தை ஏலம் விடுவதன் மூலம் தி...