Posts

Showing posts with the label TYPIST

TYPIST GOPU -MGR

Image
  டைப்பிஸ்ட் கோபு!!-  எம்.ஜி.ஆர் காசே கடவுள்!! --------------------------- எம்.ஜி.ஆர் பற்றிய  இந்த நிகழ்வை எவ்வளவு பேர்கள் அறிந்திருப்பீர்கள் என்பது நமக்குத் தெரியாது!  நம் கடன் பதிவு செய்து கிடப்பதே? டைப்பிஸ்ட் கோபு!! அந்த கால சினிமாக்களில் நகைச்சுவைக் காட்சிகளில் வலம் வந்தவர்! அதே கண்கள்,,காசே தான் கடவுளடா போன்ற படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்!! சிவாஜி,,ஜெய்சங்கர்,,முத்துராமன்--இப்படி அந்த கால நாயகர்களுடன்  நூற்றுக்கும் மேலான படங்களில் நடித்த இவர்,,எனக்குத் தெரிந்து எம்.ஜி.ஆருடன் நடித்ததாகத் தெரியவில்லை!! 1978!! வசந்த நாட்களாக தமிழக மக்களுக்கு புலர்ந்தது- அசந்த நாட்களாக ஆகிறது டைப்பிஸ்ட் கோபுவுக்கு?? அவரது அன்பு மகனுக்கு ஹார்ட் ஆபரேஷன்? இவர் ஒன்றும் பெரிய ஹீரோவாக ஜொலிக்கவில்லையே?? ஆபரேஷனுக்கு 15 ஆயிரம் பணம் கட்ட வேண்டும்? வழக்கம் போல் தாம் சார்ந்த நடிகர்கள் அத்தனை பேர் வீட்டுக்கும் சென்று,,காலிங்-பெல்லை அழுத்தியும்-சாரி கோபு-- நீ ஒண்ணும் கவலைப்படாதே கோபு,, கடவுள் உன்னைக் கை விட மாட்டார்-- என்ன பண்ணறது கோபு? விதி வலியது?? இதில் சிவாஜி மட்டும்-- நீ எப்படியாவத...