POLI
POLI . பூரண போளி (Puran poli) என்பது ஒரு இந்திய இனிப்பு வகைகளுள் ஒன்றாகும். இது ரொட்டி போன்ற வடிவத்தில் இருக்கும். பெயர்கள் இந்த இனிப்பு வகை ரொட்டிக்கு, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பல்வெறு பெயர்கள் உள்ளன. குஜராத்தில், பூரண் போளி அல்லது வேத்மி எனவும், மராத்தியில், பூரன் போலி எனவும், மலையாளம் மற்றும் தமிழில் போளி எனவும், பக்ஷம் அல்லது பொப்பட்டு அல்லது ஒலிகா எனத் தெலுங்கிலும், தெலுங்கானாவில் போலெ எனவும், ஹொலிஜ் அல்லது ஒப்பட்டு என கன்னடத்திலும், உப்பட்டி அல்லது சாதாரணமாக போளி என கொங்கணியிலும் அழைக்கப்படுகிறது. வரலாறு இதன் செய்முறை, பக்ஷம் என்கிற தலைப்பில், 14ஆம் நூற்றாண்டு தெலுங்கு கலைக்களஞ்சியமான "மனுசரித்திரா"வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நூலைத் தொகுத்தவர் தற்போதுள்ள ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அல்லசானி பெத்தன்னா ஆவார்.[1] தேவையான பொருட்கள் பூரண போளி, கடலைப் பருப்பு, மைதா மாவு அல்லது கோதுமை மாவு, வெல்லம் அல்லது கரும்பு சர்க்கரை , ஏலக்காய் தூள் மற்றும் / அல்லது ஜாதிக்காய் தூள், நெய் மற்றும் நீர் ஆகியவற்றை உபயோகித்து தயாரிக்கப்படுகிறது. சில ச...