MALINI FONSEHAA ,SRILANKA ACTRESS BORN 1947 APRIL 30
MALINI FONSEHAA ,SRILANKA ACTRESS BORN 1947 APRIL 30 மாலினி பொன்சேகா இலங்கை, கெலனிய, பெலியகொட என்ற இடத்தைச் சேர்ந்த கில்பெர்ட்-சீல்வத்தியே ஃபொன்சேகா தம்பதியரின் மூன்றாவது மகளாக 30.4.1947 அன்று பிறந்தவர். இவரது பிறப்புக்குப் பின் இவரது குடும்பம், நுகையெகொட என்ற இடத்திற்கு இடம் பெயர்ந்தது. இவரது 5-ஆவது வயதில் நுகையெகொட புனித ஜோன்ஸ் கல்லூரியில் ஐந்தாம் தரம் வரை கல்வி பயின்ற பின் குடும்பம் மீண்டும் வேத முல்லே என்ற பகுதிக்குக் குடி பெயர்ந்தது. பின்னர் கெலனிய, குருகுல மகாவித்யாலயாவில் கல்வியைப் பூர்த்தி செய்தார். 12.6.1986 அன்று லக்கி டயஸ் என்பவரைத் திருமணம் செய்தார். 1963-இல் இவர் மேடை நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். பிரதான கதாபாத்திரத்தில் 14 நாடகங்களில் நடித்துள்ளார். இவரது சகோதரரும், நடிகரும், தயாரிப்பாளருமான ஆனந்த பொன்சேகா தான் இவரை திரையுலகிற்கு அறிமுகம் செய்துவைத்தார். 1968-இல் புஞ்சி பாபா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல சிங்களப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் இந்திய-இலங்கை கூட்டுத்தயாரிப்பான ‘பைலட் பிரேம்நாத்’ எ...