SETHUPATHY MANDAPAM ALIAS NOSE-CUT MANDAPAM -MADURAI HISTORY
SETHUPATHY MANDAPAM ALIAS NOSE-CUT MANDAPAM -MADURAI HISTORY மதுரை – மூதூர் மாநகரத்தின் கதை - 6 | மூக்கறு மண்டபம் என்கிற சேதுபதி மண்டபம் சொல்லும் மதுரையின் கதை! ஆயிரக்கணக்கன பெண்கள், குழந்தைகள், ஆண்களின் மேலுதட்டுடன் மூக்கும் கொடுமையான முறையில் அரிந்து எடுக்கப்பட்ட மிக வக்கிரமான போர் ஒன்றை மதுரை மண் அனுபவித்திருக்கிறது. மதுரை என்றாலே மீனாட்சி அம்மையோடு, அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் நினைவுக்கு வந்துவிடும். பத்துநாள் மதுரையே கொண்டாடிக் களிக்கும் சித்திரை திருவிழாவில், ஏழாம் நாள் அனந்தராயர் மண்டபத்தில் இருந்து கிளம்பி, சேதுபதி மண்டபத்தில் அழகர் இரவு தங்குவார். அங்கு இரவில் பூப்பல்லக்கு நடைபெறும். அதன்பின் எட்டாம் நாள் காலை பூப்பல்லக்கு ஜோடனையோடு கிளம்பி, ஒன்பதாம் நாள் வழிநெடுக மக்களின் அன்பைப் பெற்றபடி, பத்தாம் நாள் பயணக்களைப்புத்தீர ஓய்வெடுத்து, சித்திரைத் திருவிழாவை முடித்து வைப்பார். இந்தத் திருவிழாவின் அடியொற்றி, சேதுபதி மன்னருக்கு எதற்குத் தல்லாகுளத்தில் கல்மண்டபம் என்ற கேள்விக்கு விடைதேடிப் புறப்படபோது, மதுரை மூதூர் மாநகரத்தின் கதை ஒன்று கிடைத்தது. பெண்களும், குழந...