Posts

Showing posts with the label JULY 21

SIVAJI GANESAN SILENTLY LIVED AS KARNAN BORN 1928 OCTOBER 1 -JULY 21,2001

Image
  SIVAJI GANESAN SILENTLY LIVED AS KARNAN  BORN 1928 OCTOBER 1 -JULY 21,2001 சிவாஜி கணேசன் (அக்டோபர் 1, 1928 - சூலை 21, 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும்.[2] இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் வாழ்க்கைக் குறிப்பு 'சிவாஜி' கணேசன், சின்னையா மன்ராயா் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு 4வது மகனாக பிறந்தார். இவர் மனைவி கமலா மற்றும் மகன்கள் இராம்குமார், பிரபு மற்றும் மகள்கள் சாந்தி, தேன்மொழி ஆகியோர்கள் ஆவார். திரைப்பட வாழ்க்கை முதன்மைக் கட்டுரை: சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள் சிவாஜி கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது. 'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித...

MEWAR PRINCESS KRISHNA KUMARI POISONED BY PARENTS BORN 1794 MARCH 10 - 1810 JULY 21

Image
MEWAR PRINCESS KRISHNA KUMARI POISONED BY PARENTS BORN 1794 MARCH 10 - 1810 JULY 21 மேவார் ராஜ்ஜியத்தின் பழைய சிறப்பும் வீரமெல்லாம் ஒடுங்கிப் போய் பெயரளவில் மட்டுமே மன்னராக இருக்கும் மேவார் ராஜ்ஜிய மன்னன் ராணா. அந்த மேவார் ராஜ்ஜியத்தின் இளவரசி பதினாறு வயது நிரம்பிய அழகு மயிலான கிருஷ்ணகுமாரி. ஏற்கெனவே அவளை மார்வார் ராஜாவுக்கு திருமணம் செய்துகொடுப்பதாய் நிச்சயித்திருந்தார் மன்னர். BHIMSINGH OF JODHPUR இந்நிலையில் நிச்சயம் செய்யப்பெற்ற அந்த ராஜா திடீரென்று இறந்துபோகிறார். இதனால் ஏற்படும் நிகழ்வுகளை ராஜகுமாரி என்ற சரித்திரக்கதையின் வாயிலாக கதாசிரியர் ஸ்ரீவேணுகோபாலன் அவர்கள் சோகம் நெஞ்சில் மிளிர படம் பிடித்துக் காட்டுகிறார். கதையைப் படித்து முடிக்கையில் நெஞ்சில் சில மணி நேரங்களுக்கு எந்தவொரு சந்தோஷத்தையும் அணுகவிடாத ஒரு சோகம் வந்து கவ்விக்கொள்கிறது. இளவரசி கிருஷ்ணகுமாரியை மணக்கவேண்டி இரு தேசத்து ராஜாக்கள் போட்டியிடுகிறார்கள். அதில் ஒருவர் ஜெய்ப்பூர் ராஜா ஜகத்சிங்.  மற்றொருவர் Bhim Singh of Udaipur ஏற்கெனவே கிருஷ்ணகுமாரியை நிச்சயம் செய்திருந்த மார்வார் தேசத்தில...

SIVAJI GANESAN WHO ?

Image
#சிவாஜிகணேசன்_யார்? சிவாஜி உயிருடன் இருந்தபோதேயே ஒரு விஷயம் சொல்லுவார்கள். தமிழ்நாட்டின் அதிர்ஷ்டம் சிவாஜி இங்கு வந்து பிறந்தது. அது தமிழ்நாட்டின் அதிர்ஷ்டம். ஆனால் சிவாஜியைப் பொறுத்தவரை அவருடைய துரதிர்ஷ்டம் அது. அவர் வெளிநாட்டிலோ, குறைந்தபட்சம் இந்தியாவின் வேறு மாநிலத்திலோ பிறந்திருந்தால் சிவாஜி எந்த இடத்திலோ வைத்துக் கொண்டாடப்பட்டிருப்பார். அது சிவாஜிக்கும் மிகப்பெரிய அதிர்ஷ்டமாக இருந்திருக்கும் என்று. சிவாஜி தமிழ்நாட்டிற்கு எதற்குத் தேவைப்பட்டார் என்றால், எம்ஜிஆருக்கு parallel ஆக ஒரு நடிகர் தேவைப்படுகிறார். அது சிவாஜி. இப்போது சிவாஜியா? எம்ஜியாரா? என்ற கேள்வி வருகிறது. “எம்ஜிஆர்” என்று பதிலளிக்கிறது தமிழ்நாடு. மற்ற விஷயங்களை ஒதுக்கிவிட்டு சிவாஜி விஷயத்தை மட்டும் பார்க்கும்போது சிவாஜி கணேசன் யார் என்பதையே இன்னமும் பெரும்பாலான தமிழ் மக்கள் புரிந்துகொள்ளவில்லையோ என்றே தோன்றுகிறது. எத்தனையோ நடிகர்களில் இவரையும் ஒருவராக மக்கள் எண்ணிவிட்டார்களோ என்றே படுகிறது. எங்கேயோ தொலைதூரத்தில் இருக்கும் ஊரிலிருந்து கிளம்பிவந்து எம்ஜிஆரின் சமாதியில் இன்னமும் அவர் கட்டியிருந்த கடிகாரத...