ADAMSMITH ,POLITICAL ECONOMICS BORN 1723 JUNE 5 - JULY 6,1790
ADAMSMITH ,POLITICAL ECONOMICS BORN 1723 JUNE 5 - JULY 6,1790 ஆடம் சிமித் (ஆடம் ஸ்மித்; Adam Smith; ஞானஸ்நானம் ஜூன் 16, 1723 – ஜூலை 17,1790 [பழைய முறை: ஜூன் 5, 1723 – 17 ஜூலை 1790]) ஓர் ஒழுக்கநெறி மெய்யியலாளரும் அரசியல் பொருளியலின் முன்னோடியும் ஆவார். ஸ்காட்டிய அறிவொளி இயக்கத்தின் முதன்மையானவர்களில் [1] ஒருவரான சிமித், ஒழுக்க உணர்வுக் கோட்பாடு (The Theory of Moral Sentiments), நாடுகளின் செல்வத்தின் இயல்புகள், காரணங்கள் குறித்த ஒரு ஆய்வு (An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations) (அல்லது நாடுகளின் செல்வம்) ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள் இரண்டாவது நூல் அவருடைய மிகச் சிறந்த ஆக்கம் என்பதுடன், தற்காலப் பொருளியலின் முதலாவது நூல் என்றும் கருதப்படுகிறது.[2] சிமித், ஒழுக்க மெய்யியலை கிளாஸ்கோப் பல்கலைக்கழகத்திலும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம்|ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்திலும் பயின்றார். பட்டம் பெற்றபின்னர், எடின்பரோவில் பல வெற்றிகரமான விரிவுரைகளை நிகழ்த்தினார். பின்னர் ஸ்காட்டிய அறிவொளிக் காலத்தில் அவர் டேவிட் ஹியூம் (David Hume) என்பவருடன் சேர்ந்து பணி...