Dr. Rajani Thiranagama — The story of an assassinated Human Rights activist செப்டம்பர் 21, 1989
Dr. Rajani Thiranagama — The story of an assassinated Human Rights activist செப்டம்பர் 21, 1989 ராஜினி திராணகம அல்லது ராஜினி ராஜசிங்கம் திராணகம (பெப்ரவரி 23, 1954-செப்டம்பர் 21, 1989) இலங்கையில் இருந்த மனித உரிமை செயற்பாட்டாளரும் பெண் உரிமை செயற்பாட்டாளரும் ஆவார். வரலாறு ராஜினி, வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணத்தின் தமிழ் கிறிஸ்தவக் குடும்பத்தில் பெப்ரவரி 23, 1954 இல் பிறந்தார். நிர்மலா, சுமதி, வாசுகி ஆகியோர் இவரின் சகோதரிகள் ஆவர். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணத்தில் முடித்துக் கொண்ட ராஜினி, 1973 இல் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் புலத்தில் இணைந்தார். அக்காலப்பகுதியில் மாணவர் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தார். இதன் போது அரசியல் ஈடுபாட்டைக் கொண்ட மாணவர் தலைவரான தயாபால திராணகமவை சந்தித்தார். தயாபால திராணகம பின்னாளில் களனிப் பல்கலைக்கழக விரிவுரையாளராக இணைந்து கொண்டார். 1977 இல் திராணகமவை ராஜினி மணந்து கொண்டார். அவர்களுக்கு நர்மதா (1978) ஷரிகா (1980) என இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். 1986 முதல் தயாபால திராணகம தலைமறைவாக இருக்கிறார். பட்டப்படிப்பின் பின்னர், 1978...