DMK HUNTED TAMILNADU AND ACCUSATIONS OF MGR
DMK HUNTED TAMILNADU AND ACCUSATIONS OF MGR .கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு 1972 அக்டோபர் 10-ம் நாள் எம்.ஜி.ஆர்., தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது தி.மு.க. ஆட்சி மீதும், கருணாநிதி மீதும் பல்வேறு ஊழல் புகார்களைக் கூறினார் எம்.ஜி.ஆர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான திரு.எம்.கல்யாணசுந்தரத்துடன் தமிழக கவர்னர் கே.கே.ஷாவை நவம்பர் 4-ம் தேதியன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்து கருணாநிதி ஆட்சி பற்றிய புகார் கடிதத்தை நீட்டினார். இந்தப் புகாரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து தி.மு.க. ஆட்சி மீது விசாரணை நடத்தும்படி கோரினார். ஆனால் ஆளுநரோ இதனை அப்படியே கருணாநிதிக்கு திருப்பியனுப்பி அவருடைய கருத்தை கேட்டுவிட்டுத்தான் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும் என்று நேரடியாகவே சொல்லியிருக்கிறார். இதனால் உங்களிடம் கொடுத்துப் பயனில்லை. நாங்கள் நேரடியாக ஜனாதிபதியிடமே கொடுத்துவிடுகிறோம் என்று சொல்லிவிட்டு அந்த மனுவை கே.கே.ஷாவிடம் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டு வந்துவிட்டார்கள். நவம்பர் 6-ம் தேதி காலையில் டெல்லி சென்று கு...