NILE RIVER நைல் நதி உருவான கதை
NILE RIVER நைல் நதி உருவான கதை உலகின் மிகமிக நீளமான நதி! இந்த நைல் நதி உருவான கதை ஒன்று கிரேக்கப் புராணங்களில் காணப்படுகிறது! அந்தக் கதையைப் பார்ப்போம்! கிரேக்கக் கடவுள்களிலேயே ஜீயஸ் மிகவும் சக்தி வாய்ந்தவர்! ஏனெனில் அவரால் தான் நினைத்த உருவத்தை எடுக்க முடியும். மேலும மற்றவர்களின் உருவத்தையும் தான் விரும்பியபடி மாற்றி விடுவார். காரணம் அவருக்கு பொய் பேசுவர்களைக் கண்டால் பிடிக்காது. இதன் காரணமாக எல்லா உயிரினங்களும் ஜீயûஸக் கண்டு நடுங்கின. ஜீயெஸýக்கு "ஹீரா' என்னும் அழகிய மனைவி ஒருத்தி இருந்தாள். யாருக்குமே பயப்படாத ஜீயெஸ் தன் மனைவி ஹீராவுக்கு பயந்தார்! காரணம் அவள் கண்களில் இருந்து யாரும் எதையும் மறைக்க முடியாது! ஜீயெஸ் யாரைச் சந்தித்தாலும் அவளுக்குத் தெரிந்துவிடும்! ஒரு முறை பூமியில் ஜீயெஸ் காலாற நடந்து கொண்டிருந்தபோது ஓர் அழகிய பெண்ணைக் கண்டார். அந்தப் பெண்ணின் பெயர் "லோ' என்பதாகும். அவள் அழகில் அவர் மயங்கினார். தன் மனைவியின் கண்களுக்குத் தன் செயல்பாடுகள் தெரியாமல் இருக்க பூமிப்பந்து முழுவதையும் கரு மேகங்களால் சூழச் செய்தார். பின்னர் "லோ...