HOW ROBERT CLIVE DIED 1774 NOVEMBER 22
HOW ROBERT CLIVE DIED 1774 NOVEMBER 22 கிளைவின் ஊழலும் இறுதிக்காலமும்! 1760-ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற கிளைவிடம் 2 லட்சத்து 34 ஆயிரம் பவுண்ட் பணம் இருந்தது, (அதாவது இந்திய மதிப்பில் 1 கோடியே 81 லட்சத்து 93 ஆயிரத்து 500 ரூபாய் ) தான் முறைகேடாக சம்பாதித்த பணத்தை எளிதாக இங்கிலாந்துக்கு எடுத்து செல்ல வசதியாக தங்கம் மற்றும் வைரமாக மாற்றிகொண்டார் கிளைவ், இப்படி டோனிங்டன் என்ற கப்பலில் அவர் 1400 பாளங்களாக எடுத்து சென்ற தங்கம், புயலில் சிக்கி கடலில் முழ்கிபோனது. அதை இன்றும்கூட தேடிக்கொண்டிருக்கிறார்கள். பின்பு தனது தந்தையின் கடன்களையெல்லாம் அடைத்த கிளைவ் தனது தங்கைகளுக்கு மிக ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்ததுடன் லண்டன் நகரின் முக்கிய இடத்தில் 92,000 பவுண்ட் விலை கொடுத்து பண்ணை வீடு ஒன்றை வாங்கி பிரபல பணக்காரர்களில் ஒருவராக தன்னை காட்டிகொண்டார், கிளைவ் மீது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், பெரும் ஊழல் செய்து பணம் சம்பாதித்தார் என்ற குற்றசாட்டு எழுந்தபோது அதை மறுத்த கிளைவ் பல நாடகங்களை அரங்கேற்றினார். 1769 -1973 வங்காளத்தில் பஞ்சம் ஏற்பட்டாலும் ,விவசாயிகளை கசக்கி பிழிந்தார் .விளைவு . 35 % பேர...