RASAKULLA
ரசகுல்லா- RASAKULLA பெயரைக் கேட்டவுட னேயே வாயில் எச்சில் ஊறு கிறதா? ஜீராவில் தள தள என வெள்ளை நிறத்தில் மிதக்கும் ரசகுல்லாவை உங்கள் முன்னே நீட்டினால், ரசகுல்லாவின் பூர்விகம் எது என்று கேள்வி கேட்டுக் கொண்டா இருப்பீர்கள். ஆனால் ரசகுல்லாவின் தாயகம் தங்கள் மாநிலம்தான் என்று ஒடிசா மாநிலமும், இல்லவே இல்லை எங்களுடையதுதான் என்று வங்காளிகளும் வரிந்து கட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்கின்றனர். யாருடையதாக இருந்தால் என்ன? வாங்கி சுவைக்க வேண்டியதுதானே என்கிறீர்களா... ஆனால் அவர்கள் அப்படி விடுவதாக இல்லை. ஆமாம் ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு (Geographical Indication -GI) கோரி விண்ணப்பித்துள்ளது ஒடிசா மாநில அரசு. 1999-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் புவிசார் குறியீட்டுக்காக ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி ஒரு குறிப்பிட்ட இடத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு அவற்றின் தனித்தன்மைக்காக இத்தகைய புவிசார் குறியீடு அளிக்கப்படும். உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக உள்ள இந்தியா அதில் உள்ள ஒப்பந்தப்படி இந்த சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன் மூலம் வர்த்தகம் தொடர்பான தாவாக்களைத் தவிர்...