FAMOUS SNACKS IN AREAS OF TAMILNADU
FAMOUS SNACKS IN AREAS OF TAMILNADU #கொஞ்சம் #கொறிங்க! கொறிப்பதா? அதிலும் இந்தச் சமயத்தில் இப்படியொரு ‘டாபிக்’கா? – என்று கூடச் சிலர் நினைக்கலாம். நொறுக்குத் தீனிகளையும் அரசியலையும் கூட இங்கு தனியே பிரித்துவிட முடியாது. உள்ளூர், வெளியூர் ஆவி பறக்கும் டீ-யை மறக்க முடியுமா? அட – மிக்ஸரையும், மொறுமொறு பக்கோடாவையும் தான் தேச பக்தியுடன் மறந்துவிட முடியுமா? நொறுக்குத்தீனி தின்பதை உடல்நல நிபுணர்கள் ஆரோக்கியமாகக் கண்டித்தாலும் அதிலும் வயிற்றுக்கும், நாக்குக்கும் வஞ்சகம் பண்ணாதவர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தான் கொறிக்க எத்தனை ரகங்கள்? – இதெல்லாம் விடுபட்டிருக்கிறதே என்று இதை வாசிக்கிறவர்கள் செல்லமாகக் கடிந்து கொள்ளக்கூடாது. நடுத்தர வர்க்கத்துப் பொருளாதார பட்ஜெட்டோடு ருசி தேடி – ஒரு பொடி நடை போனால் – கண்ணில் சிக்கும் சமாச்சாரங்களில் சில மட்டும் இங்கே: சென்னையில் மெரீனாப் பக்கம் போனால் சில்லென்ற காற்றுடன் மிளகாய் பஜ்ஜி, சுண்டல் வகையறாக்களைக் கொறிக்கலாம். பானி பூரி, பேல் பூரிக்கடைகள் தெருக்குத் தெரு வந்தாலும், குஜராத்திலிருந்தும், ராஜஸ்தானிலிருந்தும் வந்து குடியேறியவர்கள் மேலே லேசான க...