KASHMIR - FAROOQ ABDULLA

 




ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரான பரூக் அப்துல்லாவின் ஆட்சிக்காலம், விமர்சகர்கள் மற்றும் அரசியல் எதிர்ப்பாளர்களால் பல்வேறு காலகட்டங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அவரது நிர்வாகம் மற்றும் அரசியல் முடிவுகள் தொடர்பாக முன்வைக்கப்படும் முக்கிய விமர்சனங்கள் பின்வருமாறு: [1, 2]
  • 1987 தேர்தல் முறைகேடு புகார்கள்: ஜம்மு காஷ்மீர் அரசியல் வரலாற்றில் 1987ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி (NC) மற்றும் காங்கிரஸ் கூட்டணி இந்தத் தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகப் பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தத் தேர்தல் முறைகேடே காஷ்மீரில் ஆயுதமேந்திய தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதம் தீவிரமடைய முக்கியக் காரணியாக அமைந்தது எனப் பல அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். [1]
  • நிர்வாகத் திறமின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள்: பரூக் அப்துல்லாவின் ஆட்சிக் காலத்தில் நிர்வாகச் சீர்கேடுகள், அரசு வேலைவாய்ப்புகளில் முறைகேடுகள் மற்றும் பரவலான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது அம்மாநில இளைஞர்களிடையே அரசு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. [1]
  • பயங்கரவாதம் தலைதூக்கியது (1989-1990): 1980களின் பிற்பகுதியில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதம் மற்றும் வன்முறை உச்சக்கட்டத்தை எட்டியது. அப்போது முதலமைச்சராக இருந்த பரூக் அப்துல்லா, சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்தத் தவறியதாகவும், பயங்கரவாதத்தைக் கையாளும் வலுவான தொலைநோக்குப் பார்வை அவரிடம் இல்லை என்றும் விமர்சிக்கப்பட்டார். [1]
  • காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றம்: 1990களின் தொடக்கத்தில் காஷ்மீரி பண்டிட்டுகள் தங்களின் சொந்த நிலங்களை விட்டுத் துரத்தப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட துயரமான காலகட்டத்தில், பரூக் அப்துல்லா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு லண்டனுக்குச் சென்றுவிட்டார் என்ற கடுமையான விமர்சனம் அவர் மீது இன்றும் உள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் மக்களைக் கைவிட்டுச் சென்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. [1]


ஜம்மு: 'பரூக் அப்துல்லாவை கொலை செய்ய 20 ஆண்டுகளாக முயன்றேன்' என, அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கைதான நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.ஜம்மு - காஷ்மீரில் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில், தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சி அமைந்துள்ளது.

முதல்வர் ஒமரின் தந்தை பரூக் அப்துல்லா, ஜம்மு - காஷ்மீரின் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் ஏற்கனவே பதவி வகித்துள்ளார்.
இவரும், தற்போதைய துணை முதல்வர் சுரிந்தர் சவுத்ரியும், ஜம்முவின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் நடந்த கட்சி பிரமுகரின் இல்ல திருமண விழாவில் நேற்று முன்தினம் இரவு பங்கேற்றனர்.விழாவில், முதல்வர் ஒமர் அப்துல்லாவின் ஆலோசகர் நசீர் அஸ்லாம் வனி, தேசிய மாநாட்டுக் கட்சி எம்.எல்.ஏ., அய்ஜாஸ் ஜன் மற்றும் அக்கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.


நிகழ்ச்சி முடிந்து அனைவரும் புறப்பட்ட போது, அவர்களின் பின்னால் இருந்து வந்த நபர் ஒருவர் திடீரென பரூக் அப்துல்லா கழுத்தின் பின்னால் துப்பாக்கியை வைத்து சுட முயன்றார்.இதையடுத்து சுதாரித்த, என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் அந்த நபரின் கைகளை தட்டிவிட்டனர்.இதில், துப்பாக்கி குண்டு மேல்நோக்கி சீறிப்பாய்ந்து வெடித்தது. இந்த சம்பவத்தில் நுாலிழையில் பரூக் அப்துல்லா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும், உடனிருந்த சுரிந்தர் சவுத்ரிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை, பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவரிடம் இருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. மது போதையில் இருந்த அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் ஜம்முவின் புரானி மந்தியைச் சேர்ந்த கமல்சிங் ஜம்வால், 63, என்பது தெரியவந்தது.விசாரணையின் போது, கைதான நபர் போலீசாரிடம் கூறுகையில், 'பரூக் அப்துல்லாவை, கொல்ல 20 ஆண்டுகளாக நான் காத்திருந்தேன். இந்த திருமண விழாவுக்கு எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

' இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, என்னிடம் இருந்த உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியால் அவரை சுட முயன்றேன். ஆனால், தப்பிவிட்டார்' என கூறியுள்ளார்.கொல்ல முயன்றதற்கு தனிப்பட்ட விரோதமே காரணம் என அவர் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

பட்டாசு வெடித்ததாகவே நினைத்தேன்

திருமண விழாவில் இருந்து புறப்பட்ட போது, என் பின்னால் பட்டாசு வெடித்தது போன்ற சத்தம் கேட்டது. உடனடியாக, பாதுகாப்பு வீரர்கள் என்னை காருக்கு அழைத்து சென்றனர். அங்குதான் அவர்கள் நடந்த விபரத்தை தெரிவித்தனர். அதன் பின்னரே, எனக்கு பின்னால் வந்த நபர் ஒருவர் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. அவர் யார் என்று தெரியவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறித்த விபரங்களை என்னிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். --பரூக் அப்துல்லா, தலைவர், தேசிய மாநாட்டு கட்சி

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

PARAVAS OF TAMILNADU

INDIAN ACTRESS MADHAVI ,A LEGEND OVER 300 FILMS IN MAJOR LANGUAGES BORN 1962 SEPTEMBER 13