WAR TAX, MUSTAK TAX, AND BREAST TAX VIOLENCE OF KERALA NAMBOODRIS
WAR TAX, MUSTAK TAX, AND BREAST TAX VIOLENCE OF KERALA NAMBOODRIS போர் வரி, மீசை வரி, முலை வரி – திருவிதாங்கூர் பார்ப்பனியம் மக்கள் கலை இலக்கியக் கழகம் 2003-ம் ஆண்டு பிப்ரவரி 22,23 தேதிகளில் தஞ்சாவூரில் நடத்தி பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரைகள்… ஐயா வைகுந்தர் வழிபாடு: “கருவறைக்குள் பார்ப்பான் எதற்கு? நாங்களே தமிழில் வழிபடுகிறோம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழிருந்த குமரி மாவட்டத்தில் மனுதர்ம விதிகள் ஆட்சி செய்த காலத்தில், பார்ப்பனப் பிடியிலிருந்து வெளியேறி சாணார் (நாடார்) சாதியினருக்கான புதிய வழிபாட்டுமுறையை ஐயா வைகுந்தர் என்பார் உருவாக்கினார். இன்றளவும் அவ்வழிபாட்டினர் குமரியில் வாழ்ந்து வருகிறார்கள். ஐயா வைகுந்தர் வழிபாடு குறித்தும், அக்காலத்தின் சாதியக் கொடுமைகள் குறித்தும் மாநாட்டில் திரு. சுயம்பு (வயது 50) எடுத்துரைத்தார். “ஐயா வைகுந்தர் வாழ்ந்த காலத்தில் சாதிக்கொடுமை தலைவிரித்தாடியது. அரசன் பதினெட்டு வகைச் சாதிகளாக மக்களைப் பிரித்து வைத்து ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவற்றில் நாடார் சாதியினரைப் பதினெட்டாம் சாதியாக வைத்துத் துன்புறுத்திக்...