SLAVE REVOLUTION IN HAITI 1791 AUGUST 22
SLAVE REVOLUTION IN HAITI 1791 AUGUST 22 “ஏழை என்றும் அடிமை என்று எவரும் இல்லை பாரினில். இழிவு கொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே” என்று பாடிக்கொண்டே பாலு வந்தான். “என்ன பாட்டு பலமா இருக்கே?” என்று கேட்டார் ஞாநி மாமா. ''பள்ளிக்கூட நாடகத்தில் வருகிற பாட்டு. பயிற்சி செய்கிறேன்” என்றான் பாலு. ''எதைப் பற்றி நாடகம்?” என்று கேட்டார் மாமா. ''அடிமைத்தனத்தை ஒழித்த ஆபிரகாம் லிங்கன் பற்றி நாடகம்” என்றான் பாலு. ''அமெரிக்க லிங்கன் நாடகத்தில் இந்தியா பற்றி ஏன் வருகிறது?” என்று கேட்டேன். ''அதெல்லாம் ஸ்கூல் நாடகங்களில் எல்லாம் கலந்துதான் வரும்” என்று சிரித்தார் மாமா. ''லிங்கனுக்கு முன்பே அடிமைத்தனத்தை ஒழிக்க முயற்சி எல்லாம் நடந்தது தெரியுமா?” என்று கேட்டார் மாமா. 'ஸ்பார்டகஸ்' கதையை சொல்லிற்று வாலு. ''கிரேக்க அடிமைகளில் எழுச்சியை ஏற்படுத்தியவன் ஸ்பார்டகஸ். அவனை வைத்து நிறைய புத்தகங்கள், நாடகங்கள், சினிமா எல்லாம் வந்திருக்கின்றன. ஆனாலும், ஸ்பார்டகஸ் போராட்டம் வெற்றி பெறாத போராட்டம். பகத்சிங், சே குவேரா மாதிரி வீழ்த்தப்பட...