Posts

Showing posts with the label HARIHARAN

SINGER HARIHARAN BIOGRAPHY

Image
SINGER HARIHARAN BIOGRAPHY 1990 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை ஆண் பாடகர்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடகர்களைப் பட்டியலிட்ட பொழுது ஜெயச்சந்திரன் , யேசுதாஸ் , எஸ்.பி.பாலா - இந்த மூவர் மட்டுமே இடம் பெற்றார்கள் , 1990 ஆம் ஆண்டிற்குப் பிறகு நான்காம் நபராக இணைந்து கொண்டவர் பாடகர் ஹரிஹரன் ! தூர்தாஷனில் பாடிக் கொண்டிருந்த ஹரிஹரனைப் பற்றி தனது உறவினர் மூலம் அறிந்து கொண்ட எழுத்தாளர் சுஜாதா , ரோஜா படத்தில் பாடுவதற்காக ஹரிஹரனை மணிரத்தினத்திடம் சிபாரிசு செய்தார் . ஏ.ஆர்.ரகுமான் இசையில் “ தமிழா தமிழா நாளை நம் நாளே “ என்று தனது முதல் பாடலைப் பாடினார் ஹரிஹரன் ! ஏ.ஆர்.ரகுமானிற்குப் பிறகு தேவாவின் இசையில் பல அற்புதமான பாடல்களைப் பாடியுள்ளார் ஹரிகரன். மேலும் இளையராஜா , சிற்பி , எஸ்.ஏ.ராஜ்குமார் , யுவன் சங்கர்ராஜா , பரத்வாஜ் , இமான் ஆகியோர் இசையிலும் பாடியுள்ளார் ஹரிஹரன். 0 நான் சிவகாசி அய்யநாடார் கல்லூரில் பயின்ற பொழுது (2000) , எனது சீனியர் ஹரிஹரன் விஸ்வநாதன் " வண்ண நிலவே வண்ண நிலவே " பாடலை அப்படியே ஹரிகரன் குரலில் பாடி அனைவரையும் கவர்ந்தார். இந்தப் பாடலுக்கான ஒத்திகை தினம...