Posts

Showing posts with the label IRULAR

FIRST EDUCATION FROM IRULAR CASTE

Image
FIRST EDUCATION  FROM  IRULAR CASTE இருளர் சமூகத்தின் முதல் ஒளி! சாதனைகள் அவ்வளவு எளிதாக யாருக்கும் கைகூடுவதில்லை. அதுவும் ஆண்களைவிடப் பெண்களின் வெற்றி மிக அவசியம். `இந்த உலகம் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும்தான்’ என சமதர்மம் பேசினாலும், ஒரு பெண்ணின் வளர்ச்சி அவ்வளவு எளிதாக நடந்துவிடுவதில்லை. கல்வியில் தொடங்கி வேலைவரை ஆணின் முகம், பெண்களை மறைத்தே வைத்துவிடுகிறது. எல்லா வாய்ப்புகளை யும் கைக்கொள்ளும் பெண்களுக்கே இதுதான் நிதர்சனம். அப்படி இருக்கையில் எந்த வசதியும் இன்றி, வாய்ப்புகள் மறுக்கப்படும் இடத்திலிருந்து ஒரு பெண் சாளரம் திறந்து, காற்றின் குளிர்ச்சியை உணர்கிறாள் என்றால், அது ஒட்டுமொத்தச் சமூகத்துக்கான வெற்றி. அப்படிப்பட்ட ஒரு பெண் மாணவி ரோஜா. பழங்குடி இருளர் சமுதாயத்தின் முதல் முனைவர் பட்டம் பெறப்போகிறவர். திண்டிவனம் அருகே மரூர் இருளர் குடியிருப்பைச் சார்ந்த ரோஜாவின் பெற்றோர் இருவருமே செங்கல் சூளையில் கூலிவேலை செய்பவர்கள். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு பிஹெச்.டி சேர்ந்தி ருக்கிறார் ரோஜா. டெக்னாலஜி யுகத்தில், சோஷியல் மீடியாவில் இளைஞர்கள் குடிகொண்டிருக...