VAI.MU.KOTHAI NAYAGI ,FREEDOM FIGHTER PUBLISHER DIED 1960 FEBRUARY 20
VAI.MU.KOTHAI NAYAGI ,FREEDOM FIGHTER PUBLISHER DIED 1960 FEBRUARY 20 வை. மு. கோதைநாயகி (டிசம்பர் 1, 1901 - பெப்ரவரி 20, 1960), தமிழகத்தைச் சேர்ந்த ஒரு புதின எழுத்தாளர். துப்பறியும் புதினம் எழுதிய முதல் தமிழ்ப்பெண் எழுத்தாளராவார். மேடைப் பேச்சாளர், கவிஞர், சமூகநல ஊழியர், இதழாசிரியர், இந்திய விடுதலைக்காகப் போராடியவர் என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர் வை.மு.கோதைநாயகி அம்மாள். இவரை சமகால எழுத்தாளர்கள், ‘‘நாவல்ராணி, கதா மோகினி, ஏக அரசி’’ என்று போற்றினர். இதுவரை வெளிவந்துள்ள தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் இவரைச் சரியாக அடையாளம் காட்டவில்லை. 115 புதினங்களை எழுதியவர். தான் வாழ்ந்த 59 ஆண்டுகளில் 35 ஆண்டுகள் எழுத்தே உலகம் என்று இயங்கினார். வாழ்க்கைச் சுருக்கம்[மூலத்தைத் தொகு] கோதைநாயகி, 1.12.1901 அன்று, செங்கல்பட்டு மாவட்டம், நீர்வளூரில் வாழ்ந்த என். எஸ். வெங்கடாச்சாரி, பட்டம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். வைணவ குடும்பத்தைச் சேர்ந்த இவரை சிறு வயதில் கோதை என்றும் ஆண்டாள் என்றும் செல்லமாக அழைத்தனர். பிறந்த ஒரு வயதிலேயே தனது தாயை இழந்தார். அதனால் அவரது...