NANCY WAKE - TERRIBLE SPY FOR FRANCE - HITLER DECLARED AWARD FOR 5000 FRANCS FOR HER HEAD
NANCY WAKE - TERRIBLE SPY FOR FRANCE - HITLER DECLARED AWARD FOR 5000 FRANCS FOR HER HEAD ஹிட்லருக்கு 'வெள்ளை எலி' - நேசப்படைக்கு ஹீரோயின், நான்சி வேக் பற்றிய ஒரு சரித்திர பார்வை ஆஸ்திரேலியாவின் இரகசிய ஏஜெண்ட் நான்சி வேக் (Nancy Wake) 98 வது வயதில் கடந்த சனிக்கிழமை காலமானார். அவருடைய பிரிவு, பிரான்ஸ், அமெரிக்க, இங்கிலாந்து மக்களிடையே வர்ணிக்க முடியாத சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு தான் நான்சி ஹீரோயின். ஹிட்லருக்கு, அவர் கண்டுபிடித்தே தீரவேண்டிய ஒரு 'வெள்ளை எலி'. நியூசிலாந்தில் பிறந்தது ஆஸ்திரேலியாவில் வளர்ந்து, ஐரோப்பாவுக்கு இடம்பெயர்ந்த நான்சி வேக் உண்மையில் ஒரு ஊடகவியலாளர். Henri Edmond Ficca எனும் பிரெஞ்சு காரரை திருமணம் செய்து கொண்ட்தன் மூலம், பிரான்ஸ் குடியுரிமை பெற்றுக்கொண்ட நான்சி மார்செயிலில் வசித்து வந்த போது, நாசிப்படை பிரான்ஸ் மீது படையெடுத்தது. 1940 ம் ஆண்டு பிரான்ஸ், ஜேர்மன் படைகளிடம் வீழ்ந்த பின், தப்பியோடிய கேப்டன் லான் கரோவின் நெட்வேர்க்கில் நான்சியும் இணைந்து கொண்டார். அங்கிருந்து பிரெஞ்சு படை வீரர்களுக்கான தபால்...