LEO TOLSTOY - VE . LENIN
LEO TOLSTOY - V.E . LENIN லியோ டால்ஸ்டாய் மறைந்து விட்டார். ஒரு கலைஞர் என்ற முறையில் அவரது உலகளாவிய முக்கியத்துவமும், ஒரு சிந்தனையாளர், பிரச்சாரகர் என்ற முறையில் அவரது உலகப் புகழும் தமக்கே உரிய வழியில் ரஷியப் புரட்சியின் உலக முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கின்றன. நாட்டின் அடிமை முறை ஆதிக்கம் செலுத்தி வந்தபொழுது எல்.என்.டால்ஸ்டாய் ஒரு மகத்தான கலைஞராகத் தோன்றினார். தமது இலக்கியச் செயல்பாட்டில் அரை நூற்றாண்டிற்கும் அதிகமான காலத்தில் அவர் படைத்தளித்த பல மாபெரும் நூல்களில் 1861-க்குப் பிறகும் அரை அடிமைத்தன அரசாக இருந்த பழைய புரட்சிக்கு முந்திய ரஷ்யாவை – நிலப்பிரபுவும் விவசாயியும் வாழ்ந்த கிராமிய ரஷ்யாவை – அவர் பிரதானமாயும் சித்தரித்தார். ரஷ்ய வரலாற்றின் இந்தக் காலகட்டத்தினைச் சித்தரிப்பதில் டால்ஸ்டாய் மிகப்பல பெரும் பிரச்சினைகளை எழுப்புவதில் வெற்றி கண்டார். கலை ஆற்றலில் மிகவும் உயர் சிகரத்தை எட்டுவதில் வெற்றி கண்டார். இதன் விளைவாக அவரது நூல்கள் உலக இலக்கியத்தில் மிகச் சிறந்தவற்றிடையே அணி செய்கின்றன. அடிமை எஜமான்களின் காலடியில் கிடந்த நாடு ஒன்றில் புரட்சிக்குத் தயாரிப்பு...