JOHN SULLIVAN ,FOUNDER OF OOTY
JOHN SULLIVAN ,FOUNDER OF OOTY உதகமண்டலம் எப்படி உருவானது .அந்த மலைக்கு மேல் போன மக்கள் யாரும் உயிருடன் திரும்ப முடியாது. அங்கு பூதங்களும் பிசாசுகளும் வசிக்கின்றன’ - இப்படி ஒரு பயம், அன்றைய சமவெளிப் பிரதேச மக்களுக்கு இருந்தது. அந்த மலைக்கு மேல் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தாலும், அந்த மலையைப் பற்றி உலா வந்த கதைகளின் காரணமாக, அதை நெருங்க பயந்தனர். அந்த மலை, இன்று சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் நீலகிரி. மலைவாழ் பழங்குடியின மக்கள் மட்டுமே வாழ்ந்த, பெரும் காடாக விளங்கிய, மற்ற மக்கள் நெருங்க பயந்த நீலகிரியை, நவீன உலகத்துக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்கு உரியவர், ஜான் சல்லிவன். கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக் காலத்தில் கோவை மாவட்ட கலெக்டராக இருந்தவர். வாருங்கள்... ஜான் சல்லிவனின் கதையோடு, நவீன நீலகிரியின் வரலாற்றையும் அறிவோம். தோடமலாவில் என்ன இருக்கிறது? 1800-களில் நீலகிரி, 'தோடமலா’ என்றே அழைக்கப்பட்டது. அந்த மலையில் வசிக்கும் பழங்குடியின மக்களில் சிலர், அவ்வப்போது கீழே இறங்கிவருவதும், அவர்களுக்குத் தேவையான பொர...