T.P.RAJALAKSHMI "சினிமா ராணி" டி. பி. ராஜலட்சுமி பிறந்த தேதி 11. 11 .11.
T.P.RAJALAKSHMI "சினிமா ராணி" டி. பி. ராஜலட்சுமி பிறந்த தேதி 11. 11 .11. டி. பி. ராஜலட்சுமி (11 நவம்பர் 1911[1] - 1964) என்னும் திருவையாறு பஞ்சாபகேச ராஜலெட்சுமி தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நடிகையும், முதல் பெண் இயக்குநரும், புதின எழுத்தாளரும் ஆவார். தமிழில் 1931 ஆம் ஆண்டில் வெளிவந்த முதல் பேசும் படமான காளிதாஸ் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். 1943 ஆம் ஆண்டுவரையில் மொத்தம் 14 திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார் வாழ்க்கைச் சுருக்கம்[தொகு] தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, சாலியமங்கலம் என்ற ஊரில் பஞ்சாபகேச ஐயர், மீனாட்சி ஆகியோருக்குப் பிறந்தவர் ராஜலட்சுமி. தந்தை அந்தக் கிராமத்தின் கர்ணமாகப் பொறுப்பு வகித்தவர். ராஜலட்சுமிக்கு எட்டு வயதிலேயே திருமணமாகி விட்டது. வரதட்சணைக் கொடுமையினால் பிறந்த வீட்டுக்கே வந்த ராஜலட்சுமியின் தந்தையும் இறக்கவே விதவைத் தாயுடன் வறுமையுடன் திருச்சி வந்து சேர்ந்தார். இவர் பிறந்த தேதி ஒரு மேஜிக் எண்ணாக இருக்கிறது 11. 11 .11. திருவையாறு பஞ்சாபகேச சாஸ்திரி ராஜலக்ஷ்மி என்பதன் சுருக்க...