ANOUSHKA SANKAR SIDAR MUSICIAN BORN 1981 JUNE 9
ANOUSHKA SANKAR SIDAR MUSICIAN BORN 1981 JUNE 9 அனுஷ்கா சங்கர் (Anoushka Shankar, வங்காள: অনুষ্কা শংকর; பிறப்பு: சூன் 9, 1981) இந்திய சித்தார் இசைக்கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் ரவிசங்கரின் மகளும், நோரா ஜோன்சின் தனது தந்தை வழியில் ஒன்று விட்ட சகோதரியுமாவார்.[1] சொந்த வாழ்க்கை மற்றும் கல்வி இலண்டனில் பிறந்த அனுஷ்கா தமது குழந்தைப் பருவத்தை லண்டன் மற்றும் தில்லி ஆகிய இரு இடங்களிலும் கழித்தார். பதின்ம வயதில் அவர், கலிபோர்னியா என்சினிடாஸில் வசித்து, சான் டைகுட்டியோ அகாடமியில் பயின்றார். 1999 ஆம் ஆண்டில் சிறப்புப் பட்டப்படிப்பு பயின்ற அவர், கல்லூரியில் சேருவதை விடவும், இசைத் துறையில் சாதனை புரிவதையே விரும்பினார்.[1] தொழில் வாழ்க்கை 2005ஆம் ஆண்டு இ சை நிகழ்ச்சியின்போது அனுஷ்காவும் ரவிசங்கரும். ஒரு சிறு குழந்தையாக இருக்கும்போதே, தமது தந்தையுடன் சித்தார் பயிற்சியைத் துவங்கிய அனுஷ்கா, தமது 13ஆம் வயதில் மேடை நிகழ்ச்சி ஒன்றை அளித்து, 16 ஆவது வயதில் இசைக்கான முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.[1] 1998ஆம் ஆண்டில் அனுஷ்கா என்ற தமது முதல் இசைத் தொகுப்பின...