POPPILI KING ALIAS RAMAKRISHNA RANGARAO CHIEF MINISTER OF TAMILNADU IN 1930`S
POPPILI KING ALIAS RAMAKRISHNA RANGARAO CHIEF MINISTER OF TAMILNADU IN 1930`S ராமகிருஷ்ண ரங்கா ராவ் (தெலுங்கு: రామకృష్ణ రంగారావు) என்னும் இயற்பெயர் கொண்ட பொபிலி அரசர் (பிப்ரவரி 20, 1901 – மார்ச் 10, 1978) 1930 களில் நீதிக்கட்சியின் தலைவராகவும், சென்னை மாகாணத்தின் முதல்வராகவும் இருந்தவர். பின்னாளில் இந்திய அரசியலமைப்பு சட்ட ஆணையத்தின் உறுப்பினராகவும், ஆந்திர சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். பிறப்பும் படிப்பும்[மூலத்தைத் தொகு] தற்போதைய ஆந்திர மாநிலத்தில் 1901 -இல் ராமகிருஷ்ண ரங்கா ராவ் பொபிலி அரசகுலத்தில் பிறந்தார். அவரது தந்தை வெங்கட கிருஷ்ண ரங்கா ராவ் பொபிலியின் ஜமீந்தாராக இருந்தவர். ராமகிருஷ்ண ரங்கா ராவுக்கு ஐரோப்பிய ஆசிரியர்களைக் கொண்டு வீட்டிலேயே கல்வி அளிக்கப் பட்டது. 1921 இல் அவரது தந்தை மறைந்த பின் பொபிலியின் பதின்மூன்றாவது அரசராக இவர் அறிவிக்கப்பட்டார்.[1][2] அரசியல் வாழ்க்கை[மூலத்தைத் தொகு] ரங்கா ராவ் 1925 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில் (கவுன்சில் ஆஃப் ஸ்டேட்) உறுப்பினரானார்; 27 வரை அப்பதவியில் நீடித்தார். 1930 இல் சென்னை மாகாண சட்டம...