Posts

Showing posts with the label எம்ஜியார்

கோவைத் தம்பி தயாரித்த பயணங்கள் முடிவதில்லை படத்தைப் பார்த்த எம்ஜியார்

Image
கோவைத் தம்பி தயாரித்த  பயணங்கள் முடிவதில்லை  படத்தைப் பார்த்த எம்ஜியார் கோவைத் தம்பி தயாரித்த பயணங்கள் முடிவதில்லை படத்தைப் பார்த்த எம்ஜியார். எதுவும் பேசாமல் எழுந்து சென்றதால் கோவைத்தம்பி பெரும் அதிர்ச்சி அடைந்தார். பயணங்கள் முடிவதில்லை கோவைத்தம்பியின் முதல் படம். தன்னுடைய தலைச்சன் குழந்தையை தன் தலைவர் எம்ஜியார்  பார்த்து வாழ்த்துக் கூறவேண்டும் என்று விரும்பினார். எம்ஜியார்  ரை சந்தித்தார். அண்ணே! ஒரு சினிமாப் படம் தயாரித்திருக்கிறேன். பயணங்கள் முடிவதில்லை என்பது படத்தின் பெயர். தாங்கள் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். குடும்பத்தோடு வரலாமா? என்று சிரித்துக்கொண்டே எம்.ஜp.ஆர். கேட்டார். கோவைத்தம்பி அசந்துவிட்டார். என்ன அண்ணா இப்படிக் கேட்கிறீர்கள்? இது எனக்கு எவ்வளவு பெருமை! எல்லோரும் வாருங்கள்! என்றார். 1982 பெப்ரவரி இரண்டாவது வாரத்தில் சென்னையில் அரங்கண்ணலுக்கு சொந்தமான ஆண்டாள் பிரிவி தியேட்டரில், எம்.ஜp.ஆருக்காக பயணங்கள் முடிவதில்லை படம் திரையிடப்பட்டது. மனைவி ஜானகி ...

எம்ஜியாரும் அவரது நாஜிக்கட்சி போன்ற செயல்பாடும் - தமிழகத்தை குட்டி சுவராக்கிய எம்ஜியார்

Image
எம்ஜியாரும் அவரது நாஜிக்கட்சி  போன்ற செயல்பாடும் - தமிழகத்தை குட்டி சுவராக்கிய எம்ஜியார்  எம்.ஜி.ஆரின் ஆட்சியை பொற்காலத்துக்கு ஒப்பிட்டும், ஜெயலலிதா அவரைப் போல் இல்லை என்றும் பலர் தற்போது விமர்சிப்பதைக் காண முடிகிறது. ஆனால், ஜெயலலிதாவின் தற்போதைய அனைத்து அரசியல் விகாரங்களுக்கும் பிதாமகராகவும் வழிகாட்டியாகவும் இருப்பவர் எம்ஜிஆரே! கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். அதனை எந்த வகையிலும் கட்டுப்படுத்தவில்லை. மாறாக அனைத்து லஞ்ச லாவண்ய நடவடிக்கைகளுக்கும் ஒற்றைச்சாளர ஊற்றுக்கண்ணாக அவரே விளங்கினார். அவருக்குத் தெரியாமல் வேறு யாரும் அதில் “பங்குபெற” முடியாது என்ற பரிணாம நிலையே அவரது சாதனை! தனது திரைப்படங்களில் மதுவுக்கு எதிராக கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டவர் எம்ஜிஆர்,  மதுவிலக்கு என்பது ஓர்  ஏமாற்று முழக்கம். இது மனச்சாட்சி உள்ளவர்களுக்கு தெரியும். மது இல்லாத தமிழகம் இருந்ததாக கூறுவது முற்றிலும் புரட்டு. சங்கத் தமிழ் நூல்களை உரத்துப் பேசும் சிலரே இப்படி ஒரு பொய்யைக் கட்டவிழ்ப்பதும், க...

எம்.ஜி.ஆருடன் முதல் சந்திப்பு- ஆரூர் தாஸ்

Image
  எம்.ஜி.ஆருடன் முதல் சந்திப்பு- ஆரூர் தாஸ்    கல்யாணராமய்யர் கம்பெனியில் டி.என்.ஆர். புரொடக்ஷன்ஸ் பேனரில், ‘‘ராணி லலிதாங்கி’ ’ படத்திற்கான வேலைகள் ஆரம்பமாயின. வாத்தியார்  தஞ்சை ராமையாதாஸ் சொன்ன கதையையும், சில நாடகக் குறிப்புகளையும் வைத்துக்கொண்டு நான் எழுதிய லலிதாங்கியின் திரைக்கதைக் கோப்பை எடுத்துக்கொண்டு எம்.ஜி.ஆரிடம் சென்றேன். காலை மணி ஒன்பது. எம்.ஜி.ஆரை சந்திக்கப் போகிறோம் என்ற சந்தோஷம். இப்பொழுது அவ்வை டி.கே.சண்முகம் சாலையும், (அப்பொழுது அதற்கு ‘லாயிட்ஸ் ரோடு’ என்று பெயர்) ராயப்பேட்டை நெடுஞ்சாலையும் சந்திக்கும் ரவுண்டானாவின் அருகில் உள்ள வழக்கறிஞர் வி.பி.ராமனின் இல்லத்திற்கு அருகே உள்ள ‘தாய் வீடு’ என்று பெயர் கொண்ட சொந்த வீட்டில் எம்.ஜி.ஆர். தன் மனைவியார் சதானந்தவதி அம்மையார் மற்றும் தனது மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியின் குடும்பத்தினருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். சதானந்தவதி அம்மையார் உடல் நலமின்றி படுத்த படுக்கையாகவே இருந்து வந்தார். “என்னால் உங்களுக்கு ஒரு சுகமும் இல்லை. எனவே, வி.என்.ஜானகியை மணந்து கொள்ளுங்கள். இதற்கு ...