Posts

Showing posts with the label ART

SCULPT ART - KRISHNAPURAM , VENKATACHALAPATHY TEMPLE ,NEAR NELLAI

Image
  SCULPT ART - KRISHNAPURAM  , VENKATACHALAPATHY TEMPLE ,NEAR NELLAI சிற்ப கலைக்கு சிறந்த சான்று.. சிற்ப கலைக்கு சிறந்த சான்று, நெல்லை அருகிலுள்ள கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில்தான் என்பதை, அங்குள்ள சிற்பங்களை கண்டு ரசித்தவர்கள் ஏற்றுக்கொள்வர்..  திருநெல்வேலியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் திருச்செந்தூர் சாலையில் உள்ளது கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயில். இக் கோயில் 16-ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. இக் கோயிலின் தனிச் சிறப்பு அங்குள்ள சிற்பங்களே. இந்த கோயிலின் வீரப்ப நாயக்கர் மண்டபம், அரங்க மண்டபம் ஆகிய இரு மண்டபங்களிலும் சுமார் 6 அடிக்கு குறையாமல் சுமார் 30-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. இந்த சிற்பங்கள் அனைத்தும் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட பிரமாண்டமான தூண்களில்தான் உள்ளன. ஒரே தூணில் எண்ணற்ற சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சிற்பங்களில் வீரன், அரச குமாரியை கடத்துதல், குறத்தி அரச குமாரனை கடத்துதல், அர்ச்சுனன், கர்ணன், ரதி, மன்மதன், நடன மங்கை என்று சிற்பக் கலைக்கு பெருமை சேர்க்கக் கூடிய சிலைகள் உள்ளன. இந்த சிலைகளில் மனிதர்களுக்கு தெரிவதுபோல...

STORY TELLING IS AN ART

Image
STORY TELLING IS AN ART உலகில் கதைகள் சொல்லப்படுவது எப்படி? June 12, 2015 வரலாறு உலகம், கதை, கதைசொல்லி, கலாச்சாரம் ஒரே கதையாக இருந்தாலும் ஒவ்வொரு நாட்டிலும் அவரவர் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு  சொல்வதே மக்களின் இயல்பு. ஒவ்வொரு கலாச்சாரமும் தனிச்சிறப்பும், வழக்கமும் கொண்டவை. தமிழகத்தில் தெருக்கூத்து முதல் பரதநாட்டியம் வரை பல்வேறு முறைகளில் கதைகளை, உண்மைகளை மக்களுக்கு கொண்டுசெல்வது பல ஆயிரம் ஆண்டுகளாக அரங்கேறி வருகிறது. அதே போல வெவ்வேறு கலாச்சார கதை சொல்லும் முறைகளில் சிறந்ததாக நான் கருதுவதை, நான் வியந்ததை தெரிவு செய்து பட்டியலிட்டிருக்கிறேன். காண்க. யுலா அவாயித் தீவுகள், வடக்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டம். அங்கே வாழும் மூத்த குடிகளாம் பொலினீசியர்கள் உருவாக்கிய நடன வடிவமே யுலா. யுலா இசைக்கருவிகளை சார்ந்த நடனம் இல்லை, அது அவர்களது மொழி சார்ந்த நடனம். மெட்டுகளுக்கு ஆடும் நடனமில்லை, வார்த்தைகளுக்கு ஆடும் நடனம். ஒவ்வொரு வார்த்தையையும் தங்களது முகபாவங்களாலும், உடல் அசைவுகளாலும் காண்போரை சென்றடையச் செய்வதே யுலா நடனக் கலைகர்களின் சிறப்பு. hula சீன நிழல் பொம்மலா...

LIFE IS AN ART LIKE MUSIC DISC

Image
LIFE IS AN ART LIKE MUSIC DISC இசைத்தட்டாகச் சுழலட்டும் இனிய வாழ்க்கை பாடலின் ஊடாக ஒலிக்கும் இசையால் பல பாடல்கள் உயிர்ப்புடன் துள்ளுகின்றன. பாடல்கள், குறிப்பாக சில திரைப்பாடல்கள் தரும் இன்பத்தை அத்தனை எளிதில் கடந்துவிட முடியாது. நம் காதுகளுக்குப் பழக்கப்பட்ட ஒரு பாடல், காற்றில் மிதந்து வந்ததும், உள்ளம் அதில் தோய்ந்து அதனோடு பயணம் செய்யத் தொடங்குகிறது. இன்ன இன்ன இடத்தில், இந்த இந்த இசைக் கருவி ஒலிக்கும், பாடல் தொடரும், பல்லவி முடிந்து, தாளக் கட்டு இப்படியாக மாறும் என்று சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும். இதெல்லாம் ஒரு திரைப்பாடல் நம் மனதுக்குள் நிகழ்த்தும் அதிசயங்கள். பாடலுடன் இணைந்து ஒலிக்கும் இசையையும், அதுதரும் சுகானுபவத்தையும் பிரித்துப் பார்க்க முடியுமா? மெல்லிசை மென்மையாக உள்ளத்தை ஊடுருவிச் செல்கிறது. மழையோ, வெயிலோ, பனிக் காற்றோ, இளம் தென்றலோ அந்தந்தப் பாடலுக்கு ஏற்றவாறும், கேட்பவர் மனநிலைக்குத் தக்கவாறும் உணர்வுகளைக் கிளர்த்துகிறது. கேக் துண்டின் மீது நம்மைப் பார்த்துக் கண்ணடிக்கும் செர்ரிப் பழம் போலவோ, மயிலின் கொண்டை அழகாகவோ பாடலின் மீது சிலபோது மிதக்கிறது இசை. ...