Friday 28 February 2020

STORY TELLING IS AN ART






STORY TELLING IS AN ART

உலகில் கதைகள் சொல்லப்படுவது எப்படி?
June 12, 2015 வரலாறு உலகம், கதை, கதைசொல்லி, கலாச்சாரம்
ஒரே கதையாக இருந்தாலும் ஒவ்வொரு நாட்டிலும் அவரவர் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு  சொல்வதே மக்களின் இயல்பு. ஒவ்வொரு கலாச்சாரமும் தனிச்சிறப்பும், வழக்கமும் கொண்டவை. தமிழகத்தில் தெருக்கூத்து முதல் பரதநாட்டியம் வரை பல்வேறு முறைகளில் கதைகளை, உண்மைகளை மக்களுக்கு கொண்டுசெல்வது பல ஆயிரம் ஆண்டுகளாக அரங்கேறி வருகிறது. அதே போல வெவ்வேறு கலாச்சார கதை சொல்லும் முறைகளில் சிறந்ததாக நான் கருதுவதை, நான் வியந்ததை தெரிவு செய்து பட்டியலிட்டிருக்கிறேன். காண்க.

யுலா

அவாயித் தீவுகள், வடக்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டம். அங்கே வாழும் மூத்த குடிகளாம் பொலினீசியர்கள் உருவாக்கிய நடன வடிவமே யுலா. யுலா இசைக்கருவிகளை சார்ந்த நடனம் இல்லை, அது அவர்களது மொழி சார்ந்த நடனம். மெட்டுகளுக்கு ஆடும் நடனமில்லை, வார்த்தைகளுக்கு ஆடும் நடனம். ஒவ்வொரு வார்த்தையையும் தங்களது முகபாவங்களாலும், உடல் அசைவுகளாலும் காண்போரை சென்றடையச் செய்வதே யுலா நடனக் கலைகர்களின் சிறப்பு.

hula

சீன நிழல் பொம்மலாட்டம்

பாரம்பரிய நிழல் பொம்மலாட்டம் நாட்டுப்புற கதைகளை, அறநெறி பாடங்களை, உள்ளூர் பிரச்சனைகளை  மக்களிடையே கதை வடிவில் சொல்கிறது. பெரும்பாலும் மண அல்லது மத விழாக்களில் இதைக் காண முடியும். தோலால் செய்யப்பட்ட பொம்மைகளை கதைசொல்லிகள் இரும்பு கம்பிகளால் இயக்குவர். இசைக்குழுவின் இசைக்கு ஏற்ப பொம்மலாட்டம் நடத்தப்படும். சீனாவின் ஆன் அரசமரபு நடைபெற்ற காலத்தில் துவங்கப்பட்ட போதிலும் இக்கலை தெற்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் பரவிற்று.

chinese_03

சசல்

கவிதை வடிவிலான பாரம்பரிய பாடல் கலை. லெபனான் நாட்டில் உருவாக்கப்பட்ட இக்கலை கிழக்கு ஆசிய நாடுகளிலும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் புழக்கத்தில் உள்ளது. ஒரு கவிஞர் அல்லது கதைசொல்லி சரணத்தை மெட்டெடுத்து பாட அதே மெட்டில் வேறு வார்த்தைகளுடன் எதிரில் உள்ள கவிஞர் பெருமக்கள் பாடுவர். ஒரு போட்டி போலவே நடைப்பெறும் இந்த சசல்.

கண்டோ

பழமைவாய்ந்த சிசிலிய கதைசொல்லல் முறையான கண்டோ கிரேக்க நாடகக்கலையிலிருந்து உருவாக்கப்பட்டது. மேம்படுத்துதலை பெரிதும் நம்பியுள்ளது இக்கலை. சிறிய மரத்தாலான மேசையின்மீது நடந்தேறும் இந்த கலைநிகழ்ச்சி பாடல்கள் அல்லது உரைநடைகளினூடாக கதையை சொல்லும். சில நேரங்களில் இசைக்கருவிகளின் உதவியுடன் நிகழ்ச்சி நடைபெறும். கதைச்சொல்லிகள் கண்டிச்டி என்று அழைக்கப்படுகின்றனர். தங்கள் நாட்டின் வரலாற்று நாயகர்களின் வீரதீர செயல்கள், அவர்கள் கடந்து வந்த போராட்டங்கள் போன்றவற்றை கதைகளாக சொல்வதை வழக்கமாக வைத்திருந்த கண்டிச்டிகள் தற்பொழுது சமகால பிரச்சனைகளின் அடிப்படையிலும் கதைகளைச்  சொல்லி வருகின்றனர்.



ரகுகோ


ஜப்பானிய பாரம்பரிய கதைசொல்லல் முறையான ரகுகோ ஒரே ஒருவரால் சொல்லப்படும் கலையாகும். கதைச்சொல்லியை அனாசிக்கா என்று அழைக்கின்றனர். நகைச்சுவை கலைஞர்களான இவர்கள் அன்றாட வாழ்வியல் பிரச்னைகளை, அறநெறி பாடங்களை கதைகளாக நகைச்சுவை உணர்வுடன் சொல்கின்றனர். எந்த குற்றங்களையோ, நிகழ்வுகளையோ நேரடியாக தாக்காமல் மறைமுகமாக மக்களை சென்றடைய இக்கலையை பயன்படுத்துகின்றனர்.

rakugo

கிரியோட்

கிரியோட்டர்கள் அல்லது செள்ளிகள் என்றழைக்கப்படும் கலைஞர்கள் மேற்கு ஆப்பிரிக்க சமுகத்தின் வரலாற்றையும்  கலாச்சாரத்தையும் பேணிக்காப்பவர்கள். கிரியோட்டர்கள் வீணை போன்ற வடிவில் இருக்கும் இசைக்கருவியான கோரா’வை தங்களது நிகழ்சிகளின்போது பயன்படுத்துகின்றனர். குடும்ப மற்றும் கலாச்சார வரலாறுகளைப் பரம்பரையியல் முறையில் பாதுகாக்கின்றனர். சில மேற்காப்பிரிக்க கிரியோட்டர்கள் மன்னர்களை வாழ்த்திப் பாடும் கவிஞர்களாகவும் செய்தி பரிமாறும் தூதுவர்களாகவும் இருந்துள்ளனர்.

griot3

தமிழ்நாட்டு கிராமிய கலையாம் வில்லுப்பாட்டும் ஒரு கதைச்சொல்லி முறை என்பது யாமறிந்ததே!

3 Comments

No comments:

Post a Comment