Monday, 17 February 2020

FAMILY PLANING PROPAGANDA IN SCREEN 1951 ONWARDS





திரையில் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரம் - 2

என்.எஸ்.கிருஷ்­ணன் இயக்­கிய என்­னெஸ்கே பிலிம்­சி­ஸின் ‘மண­ம­கள்’  (1951) படத்­தில், குடும்ப கட்­டுப்­பாடு பிர­சா­ரம் முதன்­மு­றை­யாக நேர­டி­யா­கச் செய்­யப்­பட்­டது என்று கூற­வேண்­டும்.

நாடு விடு­தலை அடைந்த பிறகு இருந்த நிலை­கள் என்ன, எதிர்­பார்க்­கப்­ப­டும் நல்ல மாறு­தல்­கள் என்ன என்­பது, ‘ஐம்­பது அறு­பது’ நாட்­டி­யப் பாட­லின் வாயி­லா­கப் படத்­தில் காட்­டப்­பட்­டது.

இந்­தப் பாட­லுக்­காக உடு­மலை நாரா­ய­ணக்­கவி எழு­திய பாட­லின் பல்­லவி, ‘‘ஆயி­ரத்தி தொள்­ளா­யி­ரத்தி அம்­பது அறு­பது நாட­கம், ஆடும் எங்­களை ஆத­ரிக்க வேணும், அறி­ஞர் எல்­லார்க்­கும் வணக்­கம்’’. இதைத் தொடர்ந்து வந்த சர­ணங்­கள் எதிர்­பார்ப்­பு­களை அடுக்­கின.

ஐம்­ப­தில் வேலைக்­கேற்ற கூலி இல்லை, அறு­ப­தில் உழைப்­பிற்கு ஏற்ற ஊதி­யம் கிடைக்­கும். ஐம்­ப­தில், பெண்­டாட்டி இருக்க, இரண்டு மூன்று வேற்­றுப் பெண்­க­ளைச் சேர்த்­துக்­கொண்டு கண­வன் கும்­மா­ளம் அடித்­தான்... அறு­ப­தில் அப்­ப­டிப்­பட்ட கண­வன் குணம் நிறைந்த மனை­வி­யு­டன் மனம் பொருந்தி வாழ்­வான்.

ஐம்­ப­து­க­ளின் தொடக்­கத்­தில் கடு­மை­யான அரிசி தட்­டுப்­பாடு நில­வி­யது. ரேஷன் முறை இருந்­தது. அரி­சிப் பயன்­பாட்­டைக் குறைத்து, மக்­கள் சிறு­தா­னி­யங்­களை உண்ண வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டது. ‘ஐம்­பது அறு­பது’ பாடல்,  ஐம்­ப­து­க­ளின் இந்த தட்­டுப்­பா­டு­கள் நீங்கி, அறு­ப­தில் ‘ஊசி முல்லை அரும்பு’ போன்ற அரிசி, மூட்டை மூட்­டை­யா­கக் கிடைக்க வேண்­டும், அதை சமைத்து மூக்­குப்­பி­டிக்க உண்ண வேண்­டும்’ என்­றது!



இது­போன்ற வித்­தி­யா­சங்­க­ளைத் தொடுத்த பிறகு, குடும்ப கட்­டுப்­பாடு தொடர்­பான அந்த ஆச்­ச­ரி­ய­மான சர­ணம் வரு­கி­றது.

‘‘பிள்­ளை­கள் அதி­கம் பெற்­றெ­டுக்­கக் கூடா­துன்னு பெண்­க­ளுக்­குக் கர்ப்­பத்­தடை உண்­டு­பண்ண வேணு­மின்னு பேசிக்­கிட்­டி­ருந்­தது அம்­பது உள்­ள­படி நல்­ல­தின்னு உல­கத்­திலே ஆணும் பெண்­ணும் ஒண்ணு ரெண்­டைப் பெத்­துக்­கிட்டு எண்­ணங்­களை மாத்­திக்­கிட்டு உடல் நலம் தேடு­வது அறு­பது!’’.

இந்த பாட­லுக்கு லலிதா- பத்­மினி சகோ­த­ரி­கள் மிக அரு­மை­யாக நட­ன­மாடி அபி­ந­யம் செய்­தார்­கள் (நட­னம் : கே.என்.தண்­டா­யு­த­பாணி பிள்ளை, ஹீரா­லால்). ‘பெண்­க­ளுக்­குக் கர்ப்­பத்­தடை’ என்­கிற போது, கர்ப்­பம் தரித்­தல் உறு­தி­யாக நிறுத்­தப்­ப­டும் என்­கிற பொரு­ளில் பத்­மினி காட்­டு­கிற முத்­திரை அற்­பு­தம்!

இத்­த­கைய கர்ப்­பத்­த­டைக்­குத் தடை­யாக இருக்­கக்­கூ­டி­யது எது? அதி­கப் பிள்­ளை­கள் பெற்­றுக்­கொண்­டால்­தான் சில­தா­வது மிஞ்­சும், கடைசி காலத்­தில் பெற்­றோ­ரைக் காப்­பாற்­றும் என்ற ஏழை­க­ளின் நினைப்­புத்­தான். ‘மண­ம­க’­­ளுக்கு  1951ல் பாடல்­கள் எழு­திய  உடு­மலை நாரா­ய­ணக்­கவி, பத்து ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு ‘தூய உள்­ளம்’ படத்­தில் இந்த விஷ­யத்தை முன்­வைத்­தார்.

‘‘நமக்­கென்ன கவலை...உழைக்க எனக்கு உடல் பலம் இருக்கு...நீ நிறைய பிள்­ளை­க­ளைப் பெத்­துக் கொடுத்­தி­ருக்கே...பணம் வரும் போது நன்­றாக செல­வ­ழித்து சந்­தோ­ஷ­மாக இருக்­க­லாம்’’ என்­கி­றான், சாமா­னி­ய­னான ஆட­வன். அதற்கு அவன் பெண்­டாட்டி என்ன கூறு­கி­றாள்?

‘‘நம்­மைப் போலே புள்­ள­குட்டி நாயா அலை­யோ­ணுமா?

நானும் நீயும் போனா நாதி ஏதும் உண்­டுமா?

உன்­னைப்­போல படிக்­காத முட்­டாள் ஆகோ­ணுமா?

யோசிக்­காட்­டிப் பின்­னாலே மோச­மா­குமே மாமா!

வரு­ஷம் ஒரு பிர­ச­வம் தவ­று­தில்லே, நானும்

வத்­த­லா­கிப்­போ­யிட்­டேன் சக்­தி­யும் இல்லே

அவ­ச­ரப்­ப­டாதே அத்தே மகனே’’ என்­கி­றாள் அவள்.

‘இத்­தோட குழந்தை குட்­டி­கள் போதும்...இனி பெற்­றதை சரி­யாக வளர்ப்­ப­தைப் பார்ப்­போம். பிள்­ளை­கள் நல்ல கல்­வி­யைப் பெற உழைப்­போம்’ என்று ஏழை ஆட­வ­னும் அவ­னு­டைய மனை­வி­யும் சேர்ந்து, டி.எம்.எஸ்., பி. சுசீலா பாடும் இந்த  பாட்­டி­லேயே முடிவு செய்­கி­றார்­கள்!

அதி­கப்­பிள்­ளை­கள் பெறு­வது  ஒரு­வி­த­மான அபத்­தம் என்று பொருள்­ப­டும்­படி அறு­ப­து­க­ளில் ஆங்­காங்கே திரைப்­பட வச­னங்­க­ளும் பாடல் வரி­க­ளும் வரத்­தொ­டங்­கின.

‘படித்­தால் மட்­டும் போதுமா’ திரைப்­ப­டத்­தில் (1962)  , அதி­கம் படிக்­காத ஜமீந்­தா­ரின் மகன் கோபால், சந்­தர்ப்­ப­வ­சத்­தா­லும் தன்­னு­டைய ஒன்று விட்ட அண்­ண­னின் சூழ்ச்­சி­யி­னா­லும் ஆங்­கில இலக்­கி­யம் மெத்­தப் படித்த ஒரு பெண்ணை  மணக்க நேர்­கி­றது. இந்த பொருந்­தாத மணத்­தின் வேத­னை­க­ளைக் கோபால் அனு­ப­வித்­துக்­கொண்­டி­ருக்­கும் போது, அவர்­க­ளுக்கு முன்னே மேடை­யில் நிகழ்த்­தப்­ப­டு­கிற பாடல், ‘கோமாளி கோமாளி கோமாளி’.  இதில், ‘ஆசை­யில்­லா­மல் திரு­ம­ணம் செய்து துடிப்­ப­வன் கோமாளி’ என்­பது கதா­நா­ய­க­னுக்­கான  பிரத்­யேக  வரி­யாக அமைந்­தது. இத­னு­டன், இன்­னொரு விஷ­ய­மும் நிதர்­சன உண்­மை­போல் கூறப்­ப­டு­கி­றது -- ‘அடுக்­க­டுக்­கா­கப் பிள்­ளை­ கள் பெறு­ப­வன் என்­னா­ளும் கோமாளி’!

‘ஆசைக்கு ஒரு பெண், ஆஸ்­திக்கு ஒரு ஆண்’ என்­பது அறி­விக்­கப்­பட்டு வரா­மல்­போன ஒரு தமிழ்த் திரைப்­ப­டத்­தின்  தலைப்­பாக அமைந்­தது. ஆனால், காலத்­தின் கட்­டா­யத்­தா­லும் குடும்ப கட்­டுப்­பாடு பிர­சா­ரத்­தின் கார­ணத்­தா­லும், இதுவே ஒரு நிய­தி­யா­கிப்­போய்க் கொண்­டி­ருந்­தது.

‘படித்­தால் மட்­டும் போது­மா’­­விற்கு அடுத்த ஆண்டு வந்த ‘இரு­வர் உள்­ளம்’ படத்­தில், ‘‘முத்­த­வன் (எம்.ஆர். ராதா) வக்­கீ­லுக்­குப் படிச்­சும், அஞ்­சாறு குழந்­தை­க­ளுக்­குத் தகப்­ப­னாகி, ஒண்­ணும் தெரி­யாத ஊதா­ரியா திரிஞ்­சுக்­கிட்­டி­ருக்­கான்’’  என்று அர­சாங்க வழக்­க­றி­ஞர் நீதி­மா­ணிக்­கம் (எஸ்.வி.ரங்­கா­ராவ்), தன் மனைவி நாகம்­மா­வி­டம் (சந்­தியா) வருத்­தப்­ப­டு­கி­றார்.

‘ஒண்­ணும் தெரி­யாத ஊதாரி’ என்று பெயர் பெற்­ற­வனை நகைச்­சுவை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் குறிப்­பிட வேண்­டும் என்­றால் எப்­ப­டிக் குறிப்­பிட வேண்­டும்? ‘புத்தி சிகா­மணி’ என்­று­தானே? இந்த வகை­யில் அமைந்த பாடல்,

‘‘புத்தி சிகா­மணி பெற்ற பிள்ளை, இது

புன்­னகை செய்­யுது சின்ன பிள்ளை,

அஞ்­சுக்­குப் பின்­னாலே வந்த பிள்ளை, இது

ஆறா­வ­தாய் வந்த சின்­னப் பிள்ளை! ’’

‘புத்தி சிகா­மணி’ என்று கூறி­யது ஒரு ஜோக்­குக்­குத்­தான் என்­பதை வலி­யு­றுத்த,

‘ஆராரோ அரி ஆராரோ, அட

அசட்டு மவப் பிள்ளை ஆராரோ’ என்று கண்­ண­தா­சன்  எழுதி வைத்­தார்.

எந்த உணர்ச்­சி­யில் உந்­தப்­பட்டு ஒரு­வர் தொடர்ச்­சி­யா­கப் பிள்­ளை­கள் பெறு­கி­றார் என்­பதை மிக அழ­காக வெளிப்­ப­டுத்­தும் பாடல், கிலியை ஏற்­ப­டுத்­தும் குழந்­தை­க­ளின் சங்‘­­கி­லி’த் தொட­ருக்கு எப்­படி முற்­றுப்­புள்ளி வைப்­பது என்­ப­தை­யும் சுட்­டு­கி­றது: ‘‘ஆசைக்­குப் பிள்ளை ஆறாச்சி, ஆறாச்சி, இனி அடுத்­துத் தடை­செய்ய ஆராய்ச்சி, ஆராய்ச்சி!’’

கிண்­ட­ல­டிக்­கப்­ப­டு­வ­தற்கு மட்­டும்­தான் அல்ல அதி­கப் பிள்­ளை­கள் பெறு­வது, வீட்­டில் கொண்­டாட்­டத்­திற்­கும் கல­க­லப்­பிற்­கும் செல்­வந்­தர் ஒரு­வ­ருக்கு எட்­டுப் பிள்­ளை­கள் என்று காட்­டி­யது, ஜெமி­னி­யின் ‘மோட்­டார் சுந்­த­ரம் பிள்ளை!’ (1966)  அவ­ருக்கு இன்­னு­மொரு பெண்­டாட்டி உண்டு, இன்­னும் இரண்­டும் பிள்­ளை­கள் உண்டு என்­ப­து­தான் கதை­யின் முக்­கி­யத் திருப்­பம்!  

கொலைத் தாக்­கு­த­லுக்­குப் பிறகு எம்.ஜி.ஆர்.முத­லில் முடித்­துக் கொடுத்த ‘காவல்­கா­ரன்’

படத்­தின் காமெடி டிராக்­கில், நாகேஷ் ஒரு மலை­யாள வைத்­தி­ய­ராக வரு­கி­றார். அவ­ரி­டம் வரும் முப்­பது வயது மலை­யா­ளிக்கு  எட்டு குழந்­தை­கள் இருக்­கின்­றன! அவ­ரி­டம் கலப்­பட மலை­யா­ளத்­தில் நாகேஷ் கேட்­கி­றார், ‘‘கவர்ன்­மென்ட் ஆஸ்­பத்­திரி போய் பர்த் கண்­டி­ரோல் செய்தோ?’’  

‘‘அது மகா­பா­வம் ஆணு,’’   என்­கி­றார் மலை­யாளி.

‘‘ஏடா புண்­ய­சீலா...எதடா பாவம்...நிண்ட குட்­டி­க­ளைக் கண்டோ...எலும்­பும் தோலு­மாய் பிரே­தம் போல காணுன்னு...சேட்டா...எண்­ணெய் என்ன விலை விக்­கும்னு அறியோ...நினக்கு கிட்­டுன்ன காசில் ஈ குட்­டி­க­ளில் தலை­யிலே எண்­ணெய் தேய்க்­கான் மதி­யாவோ...,’’ என்று கூறிச் செல்­கி­றார். பெத்­துப்­போட்­டுக்­கொண்டே இருந்­தால், அந்த ஜீவன்­க­ளுக்­கான  வச­தி­கள் செய்து தர வேண்­டாமா...அப்­படி செய்ய முடி­யாத போது, கண்­மண் தெரி­யா­மல் ஜனத்­தொ­கை­யைப் பெருக்­க­லாமா என்­ப­து­தான் அவர் கேட்­கும் கேள்வி.  

குழந்­தை­கள் பிறக்­க­வில்லை என்று வரு­கிற ஒரு செல்­வந்­த­ருக்­கும் அவர் மனை­விக்­கும் மேற்­படி பிள்­ளை­க­ளில் இரண்டை தள்ளி விடு­கி­றார், ‘காவல்­கா­ர’­­னில் வரும் நாகேஷ்.

‘‘குழந்தை இல்­லைன்னு வந்தா வேறு யாரு­டைய குழந்­தை­யையோ எங்­க­கிட்ட கொடுக்­க­றீங்க,’’  என்­கி­றார் செல்­வந்­தர், குழந்­தை­களை அழைத்­துச் சென்­ற­ப­டியே.

‘‘பணம்­னா­லும் பிள்­ளை­கள்­னா­லும் பகிர்ந்து கொடுக்­க­ணும்.... அது­தான் சோஷ­லி­சம்,’’ என்­கி­றார் நாகேஷ்!

‘தரி­ச­னம்’ (1968) படத்­தில், பாட்டு வாத்­தி­யா­ரான மனோ­ரமா, சமை­யல்­காரி வேண்­டும் என்று விளம்­ப­ரம் செய்­தி­ருந்த சோவின் வீட்­டுக்­குத் தவ­றாக வரு­கி­றார்.

‘வாங்க, வாங்க, உட்­கா­ருங்க’ என்று வர­வேற்­கும் சோ, ‘நீங்க யாரு?’ என்று கேட்­ட­வு­டன், ‘விளம்­ப­ரம் பாத்­தேன்’, என்­கி­றார் மனோ­ரமா.

சமை­யல் வேலைக்கு வந்­த­வர் போலும் என்று நினைத்­து­வி­டு­கிற சோ, ‘‘அப்போ நில்­லுங்க, அது­தான் சரியா  இருக்­கும்’’ என்று கூறி­விட்டு, தன்­னு­டைய தங்­கை­யி­டம் கூறு­கி­றார், ‘‘சமை­யல்­கா­ரிக்கு என்ன டிரஸ்...கையிலே ஹேண்ட்­பேக்...குடை, இது­தான் சோஷ­லி­சம்!’’ ‘காவல்­கா­ர’­­னில் சோஷ­லி­சத்­தின் பேரில் குழந்­தை­களை நாகேஷ் பிரித்­துக்­கொ­டுத்­தார். ‘தரி­ச­னம்’  படத்­தில் சோஷ­லி­சம் உண்டு பண்­ணும் விப­ரீ­தம் குறிப்­பி­டப்­பட்­டது!

‘தரி­ச­னம்’, ஒரு அறு­ப­தாம் கல்­யா­ணக் கொண்­டாட்­டத்­து­டன் தொடங்­கு­கி­றது. எடுத்­த­வு­ட­னேயே ‘கல்­யா­ண­மாம் கல்­யா­ணம்’ என்ற கண்­ண­தா­சன் பாடல்,  குடும்ப  கட்­டுப்­பாட்­டுப் பிர­சா­ரம் தொடர்ந்து இழை­யோ­டு­கிற பாடல். அறு­ப­தாம் கல்­யா­ணம் கொண்­டா­டும் தம்­ப­தி­யி­னு­டைய இள­மை­யின் ரக­சி­யத்­தைப் பாடல் முன்­வைக்­கி­றது: ‘‘கணக்கு வச்சு அளவு வச்சு பிள்­ளை­யைத் பெத்­தாங்க, காலம் பாத்து உற்­பத்­திக்­குத்­தடை விதிச்­சாங்க!’’

படத்­தின் இளம் ஜோடி இதி­லி­ருந்து தனக்­கொரு பாடத்­தைத் தெரிந்­து­கொள்­கி­றது.

‘ஆண் -- காத­லுக்கு உடம்­பி­ருக்கு, ஆடி­மு­டிப்­போம், அந்­தக் கர்ப்­பத்­துக்கு மட்­டும் நாம கதவை சாத்­து­வோம் பெண் - ஆசைக்­கொரு பெண்­ணைப் பெத்­துக் காத்­துக் கிடந்­தோம் ஆண் - ஆஸ்­திக்­கொரு பிள்­ளை­யைப் பெத்து சேர்த்து வளர்த்­தோம்!’

இப்­படி குடும்ப  கட்­டுப்­பாடு பிர­சா­ரத்­தைக் கொட்டி முழக்­கி­யது, சூல­மங்­க­லம் ராஜ­லட்­சு­மி­யின் இசை­ய­மைப்­பில் வீ.டி.அரசு  தயா­ரித்து இயக்­கிய  திரைப்­ப­டம். இந்­தப் பாட­லில் மிக சுவை­யின் இன்­னும் சில வரி­கள் உண்டு.

‘‘எட்டு பிள்­ளைப் பெற்­றால் கூட லாப­மா­க­லாம், அந்த

எட்­டா­வது பிள்ளை கூட மேதை­யா­க­லாம்’’ என்­கி­றான் கதா­நா­ய­கன்.

‘‘எட்­டா­வது மேதைக்­காக கர்ப்­பம் தாங்­கி­னால்,

ஏழு முட்­டாள்­க­ளைக் காலம் தோறும் வீடு தாங்­குமா’’ என்று கேட்­கி­றாள் நாயகி! இந்த கேள்­விக்கு சுவை­யைக் கூட்­டு­கிற விஷ­யம் என்­ன­வென்­றால், கண்­ண­தா­சனே தன்­னு­டைய பெற்­றோ­ருக்கு எட்­டா­வது பிள்ளை!

பெர்­னார்ட் ஷா எழு­திய ‘பிக்­மே­லி­யன்’ நாட­கத்­தின் அடிப்­ப­டை­யில், ‘மை பேர் லேடி’ என்ற ஆங்­கி­லப் படம் வந்­தது. இதை சோ தன் பாணி­யில் நாட­க­மாக்­கி­னார்.   திரைக்­கதை, வச­னம் எழுதி, ‘மனம் ஒரு குரங்கு’ என்ற திரைப்­ப­ட­மா­க­வும் வழங்­கி­னார். இதில் சோ இணைந்­து­கொள்­ளும் ஒரு டூயட் பாடல், ‘பியூட்­டி­புல் மார்­வெ­லெஸ் எக்­செ­லன்ட்’ என்று தொடங்­கு­கி­றது. அதில் சீர்­காழி கோவிந்­த­ரா­ஜன் குர­லில், ‘குழந்தை குட்­டி­கள் டூ மெனி பெறக்­கூ­டாது அம்­மணி’ என்று சோ பாடி­னார்!

தட்­டுப்­பா­டு­க­ளும் கியூ வரி­சை­க­ளும் நிறைந்த நகர்ப்­புற வாழ்க்­கை­யில் அதி­கப் பிள்­ளை­க­ளைப் பெறு­ப­வர்­கள் பாடு திண்­டாட்­ட­மா­கத்­தான் முடி­யும் என்று ஆங்­காங்கே திரைப்­பா­டல்­கள் நினை­வு­

ப­டுத்­தின. எடுத்­துக்­காட்­டாக, ‘எதிர் நீச்­சல்’ படத்­தின் டைட்­டில் பாடல், ‘கணக்­குக்கு மேலே பிள்­ளை­யைப் பெற்று காலம் கழிப்­ப­தும் எதிர் நீச்­சல்’ என்­றது.  அப்­போது அவர் இயங்­கிய தி.மு.க.விற்­குத் தனிப்­பட்ட முறை­யில் எம்.ஜி.ஆர்.,  பிர­சா­ரம் செய்­ய­வேண்­டும் என்­பது இல்லை.

ஏனென்­றால் அவரே ஒரு நட­மா­டும் பிர­சா­ரம் நிலை­யம்! ஆனால், 1968ல்  அண்­ணா­து­ரை­யின் தலை­மை­யில் அமைந்­தி­ருந்த தி.மு.க. அர­சின் திட்­டங்­க­ளுக்கு, ‘ஒளி விளக்கு’ திரைப்­ப­டத்­தில் நரிக்­கு­ற­வ­ராக வந்து அவரே பப்­ளி­சிட்டி செய்­தார்! அவ­ரு­டன் நரிக்­கு­றத்­தி­யாக ஜெய­ல­லிதா நடித்­தார்!

‘‘பெத்­தா­லும் ஒண்ணு ரெண்டு

பெத்­துப் போடு­வோம், அதுக்கு

ஒத்­து­மையா ரெண்டு பேரும் பாடு­ப­டு­வோம்’’ என்று வாலி எழு­திய,   ‘நாங்க புதுசா கட்­டிக்­கிட்ட ஜோடி­தா­னுங்க’ பாட­லில்,  இரு வருங்­கால

முதல்­வர்­கள் நரிக்­கு­ற­வர்­க­ளாக வந்து குடும்ப கட்­டுப்­பாட்­டின் அவ­சி­யத்தை மக்­க­ளுக்கு நினை­வு­ ப­டுத்­தி­னார்­கள்! ஜனத்­தொ­கை­யைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தில் தமிழ்­நாடு கண்­டி­ருக்­கும் வெற்­றி­க­ளுக்கு

இத்­த­கைய பிர­சா­ரங்­கள் உத­வி­யி­ருக்­கின்­றன.

No comments:

Post a Comment