ACTRESS PADMAPRIYA BIOGRAPHY BORN 1980 FEBRUARY 28
பத்மபிரியா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், வங்காளம், தெலுங்கு போன்ற மொழிப்படங்களில் நடித்து வரும் இவர் பல மாநில, தேசிய விருதுகளை வென்றுள்ளார். சீனு வசந்தி இலட்சுமி என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனவர்.
பிறப்பு
பத்மபிரியா தில்லியில் வசித்த தமிழ் பெற்றோரின் மகள் ஆவார். இவரின் தந்தை ஜானகிராமன், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர் மற்றும் தாய் விஜயா ஆவார். பத்மபிரியா தில்லியில் பிறந்து, பஞ்சாப்பில் வளர்ந்தார்.
திருவனந்தபுரம்: கேரள நடிகர் சங்கத்தில் ஜனநாயகம் இல்லை என பிரபல நடிகை பத்மபிரியா கூறியுள்ளார்.
கேரளாவில் பிரபல மலையாள நடிகை காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாள நடிகர் சங்க தலைவராக மோகன்லாலும், பொதுச்செயலாளராக இடைவேளை பாபுவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதோடு அன்று நடிகர் திலீப்பை மீண்டும் உறுப்பினராக சேர்க்க தீர்மானிக்கப்பட்டது. நடிகர் சங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் நடிகர் சங்க தலைவர் மோகன்லால் நிருபர்களிடம் கூறுகையில், திலீப் கைது செய்யப்பட்டதும் நடிகர் மம்மூட்டி வீட்டில் நடந்த அவசர கூட்த்தில் அவரை நீக்க முடிவு செய்யப்பட்டது. அன்று நடந்தது அதிகாரப்பூர்வ கூட்டம் இல்லை என்பதால் அடுத்து நடந்த கூட்டத்தில் அந்த முடிவு வாபஸ் பெறப்பட்டது என்றார். இந்நிலையில், பிரபல நடிகை பத்மபிரியா கொச்சியில் கூறியது: மலையாள நடிகர் சங்கத்தில் ஜனநாயகம் இல்லை. நிர்வாகிகளை அவர்கள் முன்கூட்டியே தேர்வு செய்து விடுகின்றனர். இம்முறை நடந்த தேர்தலில் நடிகை பார்வதி போட்டியிட தீர்மானித்திருந்தார். ஆனால் அப்ேபாது செயலாளராக இருந்த இடைவேளை பாபு போட்டியிடக்கூடாது என எச்சரித்தார்.
இதையடுத்து பார்வதி போட்டியிடவில்லை. தற்போது திலீப்பை சங்கத்தில் சேர்த்ததை எதிர்த்து 4 நடிகைகள் ராஜினாமா செய்துள்ளனர். ஆனால் 2 நடிகைகளின் ராஜினாமா கடிதம் மட்டும் தான் கிடைத்தது என மோகன்லால் கூறுவதை ஏற்க முடியாது. நான்கு ேபரும் ராஜினாமா கடிதத்தை இமெயிலில்தான் அனுப்பினர்.இவ்வாறு அவர் கூறினார்.
தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், மிருகம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் பத்மபிரியா. சிறந்த நடிகையான பத்மபிரியா தவமாய் தவமிருந்து படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். இவர் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன்பின் இவர் சினிமாவில் தலை காட்டவில்லை.
திருமணத்துக்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆன பத்மபிரியா இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். தற்போது தமிழில் ‘சிவரஞ்சினியும், இன்னும் சில பெண்களும்’, இந்தியில் ‘சீப்’, மலையாளத்தில் ‘கிராஸ்ரோடு’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்து பத்மபிரியா கூறும்போது, “ஒரு சினிமாவில் முக்கிய பாத்திரம் கிடைக்க வேண்டும் என்றால் நடிகை படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், சினிமா வாய்ப்பு கிடைக்காது என்றால், அதையாரால் ஏற்றுக்கொள்ள முடியும்?
புதிய நடிகைகளுக்கு மட்டுமல்ல, பெயரும்-புகழும் கொண்ட பிரபல நடிகைகளுக்கும் இதுபோன்ற விஷயங்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கிறார்கள். ஏன் என்றால் அவர்கள் சினிமாவில் இருந்தே ஆகவேண்டும் என்று நினைப்பதால் இந்த நிலை. அப்படி படுக்கையை பகிர்ந்து கொண்டவர்கள் அனைவரும் வெற்றி அடைவார்கள் என்று உறுதியாக கூறமுடியுமா?
இதுபோன்ற விஷயங்களை நான் தவிர்த்ததால் ஒதுக்கப்பட்டிருக்கிறேன். நல்ல கதை இருந்தால் தான் நான் நடிப்பேன் என்பது அவர்களுக்கு தெரியும். நடிப்பை தவிர வேறு எதுவும் என்னிடமிருந்து அவர்களுக்கு கிடைக்காது என்பதும் அவர்களுக்கு தெரியும். இதனால் தான் வேண்டாம் என்று என்னை ஒதுக்குகிறார்கள்” என்றார்.
சென்னை: நடிப்பு போரடித்துவிட்டது என்று கூறவில்லை என அலறினார் பத்மபிரியா. பொக்கிஷம், மிருகம், பட்டியல் என அவ்வப்போது கிடைக்கும் வேடங்களில் நடித்துவிட்டு ஒதுங்கி நிற்பவர் பத்மபிரியா. வாய்ப்பு வந்தால் நடிப்பது இல்லாவிட்டால் படிப்பது என்ற பாலிசியை வகுத்துக்கொண்டிருப்பவரிடம், ‘நடிப்பு போரடித்துவிட்டதா? என்றபோது அலறினார். எந்த நடிகையாவது நடிப்பதை போர் அடித்துவிட்டது என்று கூறுவாரா? அந்த வகையில் இயக்குனர்களுக்கும், ரசிகர்களுக்கும் நான் நன்றி சொல்கிறேன். பரிசோதனை முயற்சியாக என்னைவைத்து எடுக்கப்பட்ட கதாபாத்திரங்கள் பாராட்டு பெற்றிருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
அதிக படங்களில் நடிக்க மாட்டேன் என்பது, வரும் படங்களை வேண்டாம் என்று ஒதுக்கிவிடுவதோ அல்லது அதிகப்படியான படங்களில் நடித்தாக வேண்டும் என்பதோ எனது எண்ணம் கிடையாது. சில வருடம் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பிருக்கும், சில வருடம் அது குறையும். நான் நடித்த சில படங்கள் தோல்வி அடையும். இது அனைத்துமே என்னை பாதிக்காது. பிரச்னை என்னவென்றால் நடித்து முடித்த படத்தின் முழுவடிவம் எப்படி வருகிறது என்பதுதான் முக்கியம் என்றார் பத்மபிரியா.
No comments:
Post a Comment