Saturday 1 February 2020

FEMALE POPE JOHN 855-857




FEMALE POPE JOHN 855-857




பெண் போப் ஜாண். உண்மையான பெயர். ஜோவான்.
இவர் இரண்டு வருட காலம் ( 855-857) ஆண் வேடத்தில் போப் ஆண்டவராக ஆட்சியில் இருந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர் ஓர் ஆண் பெயரைத் தாங்கிய பெண்.கிரேக்க நாட்டின் ஆதென்ஸ் (Athens) நகருக்கு ஆண் வேடமிட்டுக் காதலன் ஒருவரால் கடத்தி வரப்பட்டவர். அறிவிலும் புத்திசாலித்தனத்திலும், கல்வி கேள்விகளிலும்,முதன்மையாகத் திகழ்ந்த இவர் 855 ம் ஆண்டில் (பெண் என அறியப்படாமல் )போப் ஆண்டவர் பதவிக்கு ஜாண் எனும் பெயரில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆண் வேடத்திலே போப் ஆண்டவராக உலாவி வந்த இவர் தனது காதலன் மூலம் கருவுற்றார். இச்செய்தியினை யாரும் அறியவில்லை. இவர் தனது பிரசவ தேதியை ஆய்ந்து வைக்கவில்லை. இவர் ஒரு நாள் ரோம் நகர சமய ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கிக் குதிரையில் அமர்ந்து பயணம் செய்தபோது அத்தனை பேர் முன்னிலையிலும்
தெருவில் ஓர் ஆண் மகனைப் பெற்ரெடுத்தார்.அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த மக்களும்,இதர மத குருமார்களும் இவரைக் குதிரையின் வாலில் கட்டித் தெரு முழுவதும் இழுக்கக்செய்து கொன்றனர். பிரசவம் நடந்த இடத்திலே இவர் அடக்கம் செய்யப்பட்டார். இவருடைய வரலாறு நாடகமாகவும், கதை வடிவங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ளது.பெண் போப்பினால் கிறித்துவத்துக்கு ஏற்பட்ட களங்கத்தை போக்கிடவும், இது போன்ற ஆண்-பெண் மாறாட்டம் பிற்காலத்தில் நடந்திடமாலிருக்கவும் மூன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
1..போப் ஆண்டவர் இனிக் குதிரையில் போகக்கூடாது.பல்லக்கில்தான் செல்லவேண்டும்.

2..போப் பதவியேற்றதும் அடியில் துவாரமுள்ள நாற்காலியில் அவர் ஆடையை உயர்த்தி உட்காரவேண்டும்.அவர் ஆண்தானா என ஒருவர் துவாரத்தைக் குனிந்து உற்று நோக்கி உறுதி செய்யவேண்டும்.(பளிங்கினால் செய்யப்பட்ட இந்நாற்காலி இன்றளவும் வாட்டிகன் அருங்காட்சியகத்தில் பார்வைக்கக்காக வைக்கப்பட்டுள்ளது.)
3.ரோம் நகரில் பிரசவம் நடந்த பகுதியைப் பின்னர் அரியணை எறிய போப் எவரும் உற்று நோக்கக்கூடாது எனும் பாரம்பரியம்.ஏற்படுத்தப்பட்டது..
இந்த செய்தி உமரி காசிவேலு எழுதிய கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளும் மாற்றப்பட்டனவும்... உலகாளவிய தாக்கமும் என்று நூலில் உள்ளது.

No comments:

Post a Comment