Posts

Showing posts with the label john

SAINT JOHN DE BRITO , CHRISTIAN MISSIONERY PRIEST BORN 1647 MARCH 1-1693 FEBRUARY 4

Image
  SAINT  JOHN DE BRITO ,  CHRISTIAN MISSIONERY PRIEST  BORN 1647 MARCH 1-1693 FEBRUARY 4 புனித ஜான் டி பிரிட்டோ  ( Saint John de Brito ,  போர்த்துக்கீசம் : João de Brito,  மார்ச் 1 ,  1647  –  பெப்ரவரி 4 ,  1693 )  போர்த்துக்கலைச்  சேர்ந்த  இயேசு சபை  குருவும், இரத்த சாட்சியும் ஆவார். இவர் "போர்த்துக்கலின்  புனித பிரான்சிஸ் சேவியர் " எனப் பலராலும் அழைக்கப்படுகிறார். வாழ்க்கைச் சுருக்கம் [ தொகு ] ஜான் டி பிரிட்டோ ஒரு புகழ் பெற்ற போர்த்துக்கீச உயர்குடிக்குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை சால்வடோர் டி பிரிட்டோ பெரீரா போர்த்துக்கல்லின் காலனியாக இருந்த  பிரேசிலின்  ஆளுநராக இருந்தபோது இறந்தவர்.  1662  ஆம் ஆண்டில் இயேசு திருச்சபையில் இணைந்து  கொயிம்பிரா பல்கலைக்கழகத்தில்  கல்வி கற்றார்.  1673  ஆம் ஆண்டில் மதப்போதனைக்காக  தென்னிந்தியாவின்   மதுரை  நகருக்கு வந்து சேர்ந்தார். தனது பெயரை  தமிழில்  அருளானந்தர் என மாற்றிக் கொண்டார்.  மறவர் சீமை ...

JOHN KENNEDY DECLARED AMERICAN WILL LAND ON MOON WITHIN 10 YEARS 1961 MAY 25

Image
JOHN KENNEDY DECLARED AMERICAN WILL LAND  ON MOON WITHIN 10 YEARS 1961 MAY 25 ; ‘இவன் ஒன்னுக்கு போவான், ரெண்டுக்கு போவான்.....  மூனுக்கு போகமாட்டான். இவன் நம்ப ஆளு’.  நடிகவேள் எம்.ஆர். ராதா .1961ல் அமெரிக்கா அதிபரான ஜான் கென்னடி ‘இந்த பத்தாண்டுகளுக்குள் நாம் நிலவுக்கு முதல் மனிதனை அனுப்பி உயிரோடு திரும்ப அழைத்து வந்துவிட வேண்டும்.. அமெரிக்கா சாதித்து காட்டும்’ என்று சூளுரைத்தார். இது ஓர் அரசியல் வாசகம் என்பதில் சந்தேகமே கிடையாது. பன்றிகள் வளைகுடாவை ‘கம்யூனிச’ கியூபாவிடம் (செமத்தியாக உதை வாங்கி) அமெரிக்கா தோற்ற தருணம் அது. சோவியத் யூனியன் தனது யூரிகாகரீன் பயணத்தின் மூலம் விண்ணில் மனிதனை முதலில் அனுப்பிய நாடாகி பிறகு ஒரே ஆண்டில் வாலண்டினா டெரஷ்கோவாவை விண்ணில் அனுப்பி முதல் விண்வெளி வீராங்கனையை விண்ணிற்கு அனுப்பிய நாடாகவும் ஆகி விண்வெளியியலில் தனது ஆளுமையை ஆழமாக பதித்திருந்தது. 1961 மே 25 அன்று அதிபர் கென்னடியின் அறிவிப்பு நிகழ்ந்த சூழல் இதுதான்.அந்தக்கூட்டத்தில் அவரது உரையை கேட்டு.. ‘மை காட்..இஸ் ஹீ க்ரேஸி?’ என்று கத்தியவர்களில் ஒருவர் கிரிஸ் கிராஃப்ட். அவர்...

JOHN WILKES BOOTH , MURDERER OF ABRAHAM LINCOLN BORN 1838 MAY 10 - 1865 APRIL 26

Image
JOHN WILKES BOOTH ,  MURDERER OF ABRAHAM LINCOLN BORN 1838 MAY 10 - 1865 APRIL 26 .ஜான் வில்க்ஸ் பூத் (John Wilkes Booth மே 10, 1838 - ஏப்ரல் 26, 1865) அமெரிக்க நடிகர் ஆவார். ஏப்ரல் 14, 1865 இல் வாசிங்டன், டி. சி. ஃபோர்டு திரை அரங்கில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் படுகொலை செய்யப்பட்டார். அவரைச் சுட்டுக் கொன்றவர் ஜான் வில்க்ஸ் பூத் ஆவார்.[1] பிறப்பு ஜான் வில்க்ஸ் பூத் மேரிலாந்தில் இருந்து 19 ஆம் நூற்றாண்டின் பிரபலமான பூத் திரையரங்கு குடும்பத்தில் பிறந்தார். அவர் மாரிலாந்தில் நன்கு அறியப்பட்ட நடிகர் ஆவார். பூத் தன் பெற்றோர்களுக்கு ஒன்பதாவது குழந்தையாக மே 10, 1838 அன்று நான்கு-அறைகள் கொண்ட மர வீடு ஒன்றில் பிறந்தார்.[2] லிங்கனின் கொலை ஜான் வில்க்ஸ் பூத் ஒரு கூட்டமைப்பின் ஆதரவாளராக இருந்தார். அமெரிக்காவின் அடிமை முறையை ஒழிப்பதை இவர் கடுமையாக எதிர்த்தார். இக்கூட்டமைப்பினர், துணை ஜனாதிபதியான ஆண்ட்ரூ ஜான்சன் மற்றும் மாநில செயலாளர் வில்லியம் எச். ஸீவார்ட் ஆகியோரையும் கொல்லத் திட்டமிட்டிருந்தனர். ஸீவார்ட் காயங்களுடன் தப்பித்தார். துணை ஜனாதிபதியான ஆண்ட்ரூ ஜான்சனை...

FEMALE POPE JOHN 855-857

Image
FEMALE POPE JOHN 855-857 பெண் போப் ஜாண். உண்மையான பெயர். ஜோவான். இவர் இரண்டு வருட காலம் ( 855-857) ஆண் வேடத்தில் போப் ஆண்டவராக ஆட்சியில் இருந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் ஓர் ஆண் பெயரைத் தாங்கிய பெண்.கிரேக்க நாட்டின் ஆதென்ஸ் (Athens) நகருக்கு ஆண் வேடமிட்டுக் காதலன் ஒருவரால் கடத்தி வரப்பட்டவர். அறிவிலும் புத்திசாலித்தனத்திலும், கல்வி கேள்விகளிலும்,முதன்மையாகத் திகழ்ந்த இவர் 855 ம் ஆண்டில் (பெண் என அறியப்படாமல் )போப் ஆண்டவர் பதவிக்கு ஜாண் எனும் பெயரில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆண் வேடத்திலே போப் ஆண்டவராக உலாவி வந்த இவர் தனது காதலன் மூலம் கருவுற்றார். இச்செய்தியினை யாரும் அறியவில்லை. இவர் தனது பிரசவ தேதியை ஆய்ந்து வைக்கவில்லை. இவர் ஒரு நாள் ரோம் நகர சமய ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கிக் குதிரையில் அமர்ந்து பயணம் செய்தபோது அத்தனை பேர் முன்னிலையிலும் தெருவில் ஓர் ஆண் மகனைப் பெற்ரெடுத்தார்.அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த மக்களும்,இதர மத குருமார்களும் இவரைக் குதிரையின் வாலில் கட்டித் தெரு முழுவதும் இழுக்கக்செய்து கொன்றனர். பிரசவம் நடந்த இடத்திலே இவர் அடக...