K.V.MAHADAVAN - SOFT HEARTED MUSIC DIRECTOR
K.V.MAHADAVAN - SOFT HEARTED MUSIC DIRECTOR .‘நல்ல காலம்’ பொறக்குது! கே.வி. மகாதேவனின் இசை யமைப்பு தொடர்ந்து வளர்ந்துகொண்டுவந்ததற்கு சில காரணங்கள் இருந்தன. இசையில் அவர் தனது மேதாவிலாசத்தைக் காட்ட நினைக்காமல், மக்களுக்கு இசை போய் சேர வேண்டும் என்று நினைக்கக் கற்றுக்கொண்டது ஒரு முக்கிய காரணம். ஆனால் மக்களுக்கு இந்த வகையில் போய் சேரும் இசை, பாமரத்தனமாக இல்லாமல் அதில் சில செறிவான அம்சங்கள் இருக்கும்படியும் அவர் பார்த்துக்கொண்டார். மகாதேவனின் எளிமையும், அன்பும், அமைதியும், இசையின் மெருகும், தயாரிப்பாளர்களை அவரிடம் ஈர்த்தன. இவற்றுடன், பணம் இவ்வளவு தந்தே ஆகவேண்டும் என்று அவர் என்றும் கண்டிஷன் போட்டதிலை. ‘மதனமோகினி’ எடுத்த எம்.எல்.பதி வெறும்கையில் முழம்போடுவதில் வல்லவர்! ‘மதனமோகினி’யை அடுத்து, ‘நல்ல காலம்’ என்ற படத்துடன் அவர் மீண்டும் மகாதேவனை நாடினார். தன்னுடைய ஆரம்ப காலத்திலும் சரி, பிரபலமான பின்பும் சரி, இத்தகைய தயாரிப்பாளர்களுக்கும் இசையமைத்துக் கொடுக்க மகாதேவன் தயங்கியதில்லை. அவருடைய இசையின் பிரவாகம் ஜீவநதியாக ஓடத்தொடங்கிவிட்டது. சிலர் சரியான மரி...