MAHMUD OF GAJINI 971 OCTOBER 2 -1030 APRIL 30
MAHMUD OF GAJINI 971 OCTOBER 2 -1030 APRIL 30 கசினியின் மகுமூது அல்லது கஜினி முகமது (Mahmud of Ghazni) (02 அக்டோபர் 971 – 30 எப்ரல் 1030) முகமது தற்கால ஆப்கானித்தான் நாட்டில் உள்ள கஜினி என்ற நகரத்தில் பிறந்த காரணத்தினால், இவரை கசினியின் மகுமூது என்று அழைக்கப்பட்டார். கசானவித்து வம்சத்தில் பிறந்த கசினி மகுமூது தற்கால இந்தியாவை உள்ளடங்கிய பண்டைக் கால நாடுகளைப் பதினேழு முறை தாக்கி வெற்றி வாகை சூடியவர்.[2] இவரையே கசினி முகம்மது என்றும் குறிப்பிடப்படுகிறது. மங்கோலியர்களை ஆசியா மைனரிலிருந்து (Asia Minor) விரட்டி அடித்து பெருமை பெற்றவர். கசினியின் மகுமூது அக்கால நாடுகளைக் கைப்பற்றி ஆளும் நோக்கத்தில் இல்லாது, உருவ வழிபாட்டாளர்களை வெல்லும் நோக்கிலும், உருவ வழிபாட்டு இடங்களை தகர்க்கும் நோக்கிலும், கோயிலில்களில் உள்ள பெருஞ்செல்வங்களை கொள்ளை அடிக்கும் நோக்கிலும் மற்றும் இந்து, பௌத்தர், சமணர்களை, இசுலாமிய மதத்திற்கு மதம் மாற்றம் செய்யும் நோக்கிலும்[சான்று தேவை], இசுலாம் சமயத்தின் பெயரால் ஜிகாத் எனும், இசுலாமியர் அல்லாதவர்களுக்கு எதிரான போராகவே இருந்தது. கசினி முகமது தனது பேரரசை 998 முதல...