MGR , PHILANTHROPIC ,HELPER BORN 1916 JANUARY 11
MGR , PHILANTHROPIC ,HELPER BORN 1916 JANUARY 11 வண்டுக்கு வாழ்வளித்த எம்.ஜி.ஆர்..! பழந்தமிழ் இலக்கியங்களில், தலையேழு வள்ளல்கள் இடையேழு வள்ளல்கள் மற்றும் கடையேழு வள்ளல்கள் என்று படித்திருக்கிறோம். அவர்களுள், கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரிவள்ளல், கொம்பின்றித் தவித்த முல்லைக்கொடிக்கு வேலையாளிடம் சொல்லி ஒரு பந்தல் போடச் சொல்லாமல், உடனே தன் தேரை அங்கே நிறுத்தி, அந்த முல்லைக்கொடியை அதில் படர விட்டுவிட்டுத்தான் நடந்தே இல்லம் வந்து சேர்ந்தான் என்று படித்திருக்கிறோம். அதுபோல, துன்பப்படுவோரைப் பார்த்தவுடன், அவர்களுக்கு உடனே உதவுவது எம்.ஜி.ஆரின் சிறந்த பண்பாகும் . எம்.ஜி.ஆர், தானே வலியப் போய் உதவிகள் செய்வார் என்பதால், திருமுருக கிருபானந்த வாரியார் இவருக்கு பொன்மனச் செம்மல் என்று பட்டம் வழங்கினார். எம். ஜி. ஆர் வலியப் போய் உதவியதற்குப் பல சான்றுகளைக் காட்டலாம். இந்த ஓர் அத்தியாயம் மட்டுமே ஒரு நூலாக விரிவடையும் என்றாலும், சில சான்றுகளை மட்டும் இங்கு காண்போம். வண்டுக்கு வாழ்வளித்த எம்.ஜி.ஆர் மனிதர்களுக்கு உதவியதைப் பார்ப்பதற்கு முன், வண்டுக்கு உதவிய ஒரு நிகழ்ச்சியை அறிந்து...