Posts

Showing posts with the label ELEPHANT

bombing of elephant in pine apple in kerala

Image
bombing of elephant in pine apple in malappuram , kerala  அன்னாசிப் பழத்தில் வெடி வைத்த கொடூரம்.. கர்ப்பிணி யானையின் இறுதி நிமிடங்கள்! -மனதை உலுக்கும் சம்பவம் அன்னாசிப் பழத்தில் வெடி வைத்த கொடூரம்.. கர்ப்பிணி யானையின் இறுதி நிமிடங்கள்! -மனதை உலுக்கும் சம்பவம் .ஆற்றில் இறங்கி அசைவற்று நிற்கும் யானை குறித்த தகவல் கிடைத்ததும் வனத்துறை அதிகாரி மோகன கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள், சுரேந்திரன் மற்றும் நீலகாந்தன் ஆகிய கும்கி யானையுடன் சம்பவ இடத்துக்குச் சென்றனர். `கேரளா’ என்றால் நம் மனத்துக்கு நினைவுக்கு வரும் சில விஷயங்களில் யானைக்கு முக்கிய இடம் இருக்கும். கோயில் திருவிழாக்கள் தொடங்கி மலை வாழ் மக்களின் அன்றாட பணிகள் வரை கேரளாவில் யானைகள் முதல் வரிசையில் நிற்கும். உருவத்தில் யானை பெரிதென்றாலும் மனிதர்களுடன் எளிதில் பழகும் தன்மை கொண்டது. அப்படியான கேரள மாநிலத்தில், கர்ப்பிணி யானை ஒன்றுக்கு நேர்ந்தது கொடுமையின் உச்சம்.ஆம், இன்னும் 18-20 மாதங்களில் அழகான யானைக் குட்டியை ஈன்று அதனுடன் கொஞ்சி விளையாட இருந்த பெண் யானைக்கு பழத்தில் வெடிமருந்து நிரப்பி கொடுத்திருக்கிறார்கள் மனிதர்கள...

RAJINIKANTH , ELEPHANT RIDER SHOWING BANANA INFRONT OF ELEPHANT

Image
RAJINIKANTH , ELEPHANT RIDER SHOWING BANANA INFRONT OF ELEPHANT  முன் குறிப்பு- இங்கு சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை படித்துவிட்டு என்னை சீமான், ஸ்டாலின், எடப்பாடி, தினகரன், விஜய் மற்றும் யாரெல்லாம் மனசில் வருகிறார்களோ, அவர்களின் சொம்பு, கூஜா, டபரா என்று கூட சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால் எழுத வேண்டியது என் வேலை. ஏற்றுக் கொள்வதும், தூற்றித் தள்ளுவதும் அவரவர் தலையெழுத்து! மன்னை சாதிக் என்ற மாங்கா மடையனை பற்றிக் கூட தன் பொன்னான பத்திகளில் சில எழுத்துக்களை ஒதுக்க வேண்டிய அளவுக்கு செய்தி பஞ்சத்தில் தத்தளித்து வருகின்றன ஊடகங்கள்! ஒரிஜனல் நிலைமை இப்படியிருக்க, நாடே விரும்புகிற ஒரு சூப்பர் நடிகரை பற்றி எழுதினால், பேசினால், காட்சியாக காட்டினால் தன் சாப்பாடு தூக்கத்தை கூட விட்டுவிட்டு கேட்பார்கள். இந்த ஒரு காரணத்திற்காகதான் பொருந்தாத சேற்றுக் குவியலை உருட்டி உருட்டி அரசியல் சட்டி செய்து கொண்டிருக்கிறது மீடியா. இதை வைத்துக் கொண்டுதான் கடந்த 25 வருஷமாக அரசியல் வானத்திலும் மின்னலடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. மின்னலின் நேரம் சில நிமிஷங்கள்தான். ரஜினியும் அரசியலில் அவ்வளவுதான் தாக...

ELEPHANT -REMARKABLE ANIMAL

Image
ELEPHANT -REMARKABLE ANIMAL ஏசி அறையிலோ , எட்டு ரூபாய்க்கு 20 எம்பி கிடைக்கும் நெட்டில் எது வேண்டுமானாலும் எழுதலாம்.. அதிகமான Tranquilizer பயன்படுத்தியதால் தான் யானை இறந்தது என்பது உண்மையாக இருக்கலாம்.. ஆனால் காட்டுக்குள் மனிதன் போனதால் யானை ஊருக்குள் வந்ததாக சொல்வதெல்லாம் கண்ணால் பார்க்காமல் சும்மா ஒப்புக்கு எழுதும் கதைகள் தான்.. யானைகள் தனக்கென்று ஒரு வழித்தடத்தை நிரந்தரமாக அமைத்துக்கொள்ளும் வழக்கம் உள்ளவை.. இன்று தாய் யானை வரும் அதே வழியில் அதன் குட்டி இன்னும் பத்து ஆண்டுகள் கழித்தும் வரும்.. அந்த யானை குட்டி போட்டால் அதுவும் அந்த வழித்தடத்தை பின்பற்றும் .. இது ஆண்டுகள் பலவானாலும் மாறாத யானைகளின் பழக்க வழக்கம்.. உணவுக்காக அலையும் யானைகள் மட்டுமல்ல.. நீருக்காக அந்த வழியை மாற்றும் யானைகள் தடம் மாறி ஊருக்குள் வரும்போது அங்கே கிடைக்கும் பயிர் உணவு வகைகள் , நீர் , அரிசி என அறிந்துகொண்டு விடுகின்றன. அதன் பின்னர் அந்த பகுதியை தங்களின் உணவு கேந்திரமாக மாற்றிக்கொள்கின்றன. வால்பாறையில் இருக்கும் யானைகள் அடிக்கடி ரேசன்கடைகள் ,மளிகை கடைகளை துவம்சம் செய்து அரிசியை உண்கி...

WORLD ELEPHANTS DAY AUGUST 12 உலக யானைகள் தினம் ஆகஸ்ட் 12

Image
WORLD ELEPHANTS DAY AUGUST 12 உலக யானைகள் தினம் ஆகஸ்ட்  12 இந்திய யானை  ( Elephas maximus indicus ) என்பது அறியப்பட்ட மூன்று  ஆசிய யானை  துணை இனங்களில் ஒன்றும் ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டதுமாகும். 1986 இலிருந்து ஆசிய யானைகள் 60-75 வருட கணக்கெடுப்பில், கடந்த மூன்று தலைமுறைகள் குறைந்தது 50%க்கு மேல் அருகிவருவதால்  அருகிய இனமாக   பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால்  பட்டியலிடப்பட்டுள்ளது.  இந்திய யானைகள் இந்தியா, நேபாளம், வங்காளதேசம், பூட்டான், மியன்மர், தாய்லாந்து, மலாய், லாவோஸ், சீனா, கம்போடியா, வியட்நாம் ஆகிய நாடுகளைப் பிறப்பிடமாகக் கொண்டது. அவை மேச்சல் நிலங்கள், உலர் இலையுதிர் காடுகள், ஈரளிப்பான இலையுதிர் காடுகள், பசுமையான காடுகள், அரை பசுமையான காடுகள் என்பனவற்றை வாழ்விடமாகக் கொண்டன. 1990 களின் ஆரம்பத்தில் கணக்கிடப்பட்ட எண்ணிக்கையளவு பின்வருமாறு: [6] 26,390–30,770 : இந்தியா - நான்கு பொது இடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது வடமேற்கு —  உத்தராகண்டம் ,  உத்தரப் பிரதேசம் , கட்டனிகாட் வனவிலங்...