ALL INDIA RADIO ,CEYLON RADIO- RESPIRATION OF LIFE
ALL INDIA RADIO ,CEYLON RADIO- RESPIRATION OF LIFE அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் நம்முடைய தொழில்நுட்ப பயன்பாடுகள் இருக்கின்றன. ஆனாலும், பழைமை குறித்த நினைவுகளில் மூழ்கினால் அதனூடாக இழையோடும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்க முடியாது. செல்போன் வருகைக்குப் பின்னர், உலகமே கைக்குள் சுருங்கிப் போய்விட்டது. ஆனாலும்கூட பழங்காலத்தில் எங்கோ ஒரு வீட்டின் ரேடியோவில் இருந்து ஒலிக்கும் இசையைக் கேட்டு அந்த வழியாகச் செல்பவர்கள் நின்று ரசிப்பதுண்டு. அத்தகைய சுவையான நினைவூட்டங்களை விகடன் வாசகர் நம்முடன் பகிர்ந்துகொள்ளும் பகுதி இது. 1970-களின் பிற்பகுதியிலும் 1980-களின் முற்பகுதியிலும் பிறந்தவர்களுடைய முக்கிய பொழுதுபோக்கு என்பது விளையாட்டைத் தவிர்த்து வானொலி (Radio) கேட்பதாகவே இருந்திருக்க முடியும். அந்த அளவுக்கு அந்தக் காலத்தவர்களின் வாழ்வோடும் வானொலி நேரடித் தொடர்பில் இருந்தது.அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும்தான் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும் என்ற நிலைமை அப்போது இருந்தது. திருச்சி மற்றும் விவிதபாரதி என இரு அலை வரிசைகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படும். வானொலி மூலமாக...