JOHN D .BRITTO , GOT MURDERED 1693 FEBRUARY 4
JOHN D .BRITTO , GOT MURDERED 1693 FEBRUARY 4 புனித ஜான் டி பிரிட்டோ (Saint John de Brito, போர்த்துக்கீசம்: João de Brito, மார்ச் 1, 1647 – பெப்ரவரி 4, 1693) போர்த்துக்கலைச் சேர்ந்த இயேசு சபை குருவும், இரத்த சாட்சியும் ஆவார். இவர் "போர்த்துக்கலின் புனித பிரான்சிஸ் சேவியர்" எனப் பலராலும் அழைக்கப்படுகிறார் வாழ்க்கைச் சுருக்கம்[மூலத்தைத் தொகு] ஜான் டி பிரிட்டோ ஒரு புகழ் பெற்ற போர்த்துக்கீச உயர்குடிக்குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை சால்வடோர் டி பிரிட்டோ பெரீரா போர்த்துக்கல்லின் காலனியாக இருந்த பிரேசிலின் ஆளுநராக இருந்தபோது இறந்தவர். 1662 ஆம் ஆண்டில் இயேசு திருச்சபையில் இணைந்து கொயிம்பிரா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். 1673 ஆம் ஆண்டில் மதப்போதனைக்காக தென்னிந்தியாவின் மதுரை நகருக்கு வந்து சேர்ந்தார். தனது பெயரை தமிழில் அருளானந்தர் என மாற்றிக் கொண்டார். மறவர் சீமை மன்னரால் சிறையிடப்பட்டு நாடுகடத்தப்பட்ட அவர் ஐரோப்பாவுக்குத் திரும்பி, 1683 இல் லிஸ்பன் திரும்பினார். அவருடைய குழந்தைப்பருவ நண்பரான இரண்டாம் பேதுரோ மன்னர் அவரை நாட்டிலேயே தங்குமாறு வேண்டிய போதும்...