M.R.RADHA BOLD MAN AGAINST CASTE AND RELIGION
M.R.RADHA BOLD MAN AGAINST CASTE AND RELIGION தமிழ்நாட்டில் ஒரே ஒரு நடிகருக்கு மட்டும்தான் அந்த அசாத்திய துணிச்சல் இருந்தது. எம் ஆர் ராதா. அவரைப்போல ஜாதி மத துவேஷங்களுக்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்த நடிகர் வேறு எவரும் இல்லை. எதைப்பற்றியும் கவலைப்படாமல் யாரைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் தன் மனதுக்குப் பட்டதை பளிச்சென்று துணிவோடு சொன்னவர் எம் ஆர் ராதா. எம். ஆர். ராதாவின் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் இது. ஒரு முறை கம்பர் விழாவில் பேச, எம்.ஆர். ராதாவுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய எம்.ஆர். ராதா, “பெரியவங்களே, சின்னவங்களே, பொம்பளைங்களே ! நீங்கள் எல்லாம் இப்ப எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரியும். இந்த கம்ப நாடாரின் விழாவிலே...” என்று ஆரம்பித்த போது ஒருவர் குறுக்கிட்டு, “ அய்யா... அவரு நாடாரு இல்ல..” என்றார். “நாடார் இல்லயா ? அப்ப இந்த கம்ப முதலியாராகப்பட்டவர்...” “அய்யா... அவரு முதலியாரும் இல்ல...”என்றார் கூட்டத்தில் இருந்தவர். “முதலியாரும் இல்லயா ? சரி... என்னன்னு புரிஞ்சு போச்சு; இந்த கம்பர் அய்யர் ஆனவர்...” “அய்யா... அவரு அய்யரும் இல்...