Posts

Showing posts with the label ARTIST

JEYARAJ ARTIST

Image
  JEYARAJ  ARTIST இன்றைக்கு 63 ஆண்டுகளுக்கு முன்னர் பத்திரிக்கைகளுக்கு சித்திரங்கள் போட துவங்கி விட்டார் திரு.ஜெயராஜ். சரியாக சொல்வதென்றால் 10-10-1958 ஆம் ஆண்டில் இருந்து சித்திரங்கள் போட்டு கொண்டிருக்கிறார் ஜெ... தமிழ் இதழ்கள் மட்டும் அல்ல..தெலுங்கு,மலையாள இதழ்களுக்கும் சித்திரங்கள் போடுகிறார்.. அவர் சித்திரங்கள் போட்ட அந்த பிற மொழி இதழ்கள் அவரது வீட்டில் குவிந்து கிடக்கின்றன... குமுதத்தில் அவர் போட்டிருக்கின்ற நகைச்சுவை துணுக்குகள் ஏராளம்.. சிறுவர்களை வைத்து நிறைய நகைச்சுவை துணுக்குகள் போட்டிருக்கிறார் திரு.ஜெயராஜ்.. நிறைய ஸ்ட்ரிப்ஸ் எனப்படும் சித்திர துணுக்குகள்.... மரண அடி மல்லப்பா நினைவிருக்கிறதா உங்களில் எவருக்கேனும்? இடியப்ப நாயக்கர் பரம்பரை பயில்வான்.. கருப்பு நிற கை இல்லா பனியன்.. கைலி கட்டி கொண்டு கலக்குவார்.. முறுக்கு மீசை...ஆனால் எல்லோரையும் போல மனைவிக்கு பயந்தவர்... வெயிட் வெங்கம்மா.....சரியான குண்டம்மா... நவ நாகரீக உ டை அணிந்து வரும் நாரிமணி.. நீச்சல் உடையில் கூட வருவார். நடு வானில் என்று ஒரு சித்திர தொடர்.. கர்னல் ஸாரநாத்,ராணி சாஹிபா,ஒற்றை கண்ணாடி,புலி குட்டி ஒன...

COMEDY AND MIMICRY ARTIST SADAN BIOGRAPHY

Image
  COMEDY AND MIMICRY ARTIST  SADAN BIOGRAPHY ” சதன் “ என்ற மூன்றெழுத்துக்காரரை நினைவிருக்கிறதா? சதன் உயிரா மானமா, எதிர் வீட்டு ஜன்னல், பட்டிக்காடா பட்டணமா, தேன்கிண்ணம், படிக்காத பண்ணையார் போன்ற ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 1960-1970-களில் திரைப்படங்களில் ஆடு, மாடு, கோழி, நாய், பேய் என்றால் இவரைத்தான் அழைப்பார்கள் குரல் கொடுக்க.  முன்பு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதனின் இசைக்குழுவில் சதன்தான் ஆஸ்தான விகடகவிபோல் விளங்கி வந்தார். மிமிக்கிரிக்கு சதனை முழுமையாக பயன்படுத்தி வந்தவர் எம்.எஸ்.விசுவநாதன் தான். பிரபலமான போனால் போகட்டும் போடா பாடலில் வரும் ஆந்தை, நரி, பேய்க் குரலெல்லாம் சதனுடையது தான். 1959-இல் வெளிவந்த “சதுரங்கம்” என்ற மலையாளப் படத்தில் தான் இவர் நடிகராக அறிமுகமானார். மலையாளத்தில் சிறந்ததொரு நகைச்சுவை நடிகராக இவர் திகழ்ந்து வந்தார்.  இவர் நகைச்சுவை நடிகராகத் தோன்றிய “வான்மாரே அவசியமுண்டு” என்ற மலையாளப்படம் கேரளத் திரையரங்குகளில் 50-நாட்களைத் தாண்டி ஓடி வெற்றி பெற்றது. “கீதா அவுர் சீதா” இந்திப்படத்தைத் தழுவி நடிகை லெட்சுமி தயாரித்த “பெந்தம்” என்...

ILAIYARAJA , ARTIST DIED ON CORONO JUNE 7 ,2021

Image
 ILAIYARAJA , ARTIST  DIED  ON CORONO JUNE 7 ,2021 தத்ரூப ஓவியங்களின் அரசன் இளையராஜா மரணம்… மாபெரும் கலைஞனை இழந்துவிட்டோம்! புகைப்படமா, ஓவியமா என எல்லோருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் தத்ரூப ஓவியங்களின் அரசன் இளையராஜா. ஆனந்த விகடனில் 2010 முதல் வெளிவரத் தொடங்கிய இவரது ஓவியங்கள் உலகம் முழுக்க புகழ்பெற்றன. பல்வேறு விருதுகளையும், அங்கீகாரங்களையும் பெற்றிருக்கும் ஓவியர் இளையராஜா நேற்று நள்ளிரவு 12 மணியளில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருக்கு வயது 43. கும்பகோணம் அருகே செம்பியவரம்பில் எனும் கிராமத்தில் பிறந்தவர் இளையராஜா. ஐந்து அண்ணன்கள், ஐந்து அக்காக்கள் என மிகப்பெரிய குடும்பத்தில் பிறந்த கடைசி மகன். கடந்த வாரம் அக்கா மகளின் திருமணத்துக்காக கும்பகோணத்துக்குப்போனவர், சில நாட்களுக்கு முன்னர் சென்னை திரும்பியிருக்கிறார். ‘’ஊரில் குளத்தில் குளித்ததால் சளி பிடித்திருக்கிறது’’ என நண்பர்களிடம் சொன்னவர் அவராகவே மருந்து கடையில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டிருக்கிறார். பின்னர் அவர் குடும்பத்தில் பலருக்கும் கொரோனா தொற்றுப்பரவ ஆரம்பிக்க சில நாட்களுக்கு முன்னர...